JEE மெயின்ஸ் தேர்வுக்கு சிறப்பு இலவச பயிற்சி - அறிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.. மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த மாவட்ட ஆட்சியர்...!
தாட்கோ மற்றும் சிபிசிஎல் இணைந்து மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வில் JEE Mains தேர்ச்சி பெற சிறப்பு இலவச பயிற்சி வழங்கவுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் தெரிவித்துள்ளார்.

தாட்கோ மற்றும் சிபிசிஎல் இணைந்து மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வில் JEE Mains தேர்ச்சி பெற சிறப்பு இலவச பயிற்சி வழங்கவுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் தெரிவித்துள்ளார்.
ஜேஇஇ தேர்வு
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வில் (JEE Mains) தேர்ச்சி பெற சிறப்பு பயிற்சி வழங்கவுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அளித்துள்ள செய்திக்குறிப்பில் உள்ள சாராம்சம்கள்.
பயிற்சியில் சேருவதற்கான தகுதிகள்
- பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்கு பாடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த மாணவர்கள் 65 சதவீதமும், பிற இனத்தைச் சார்ந்த மாணவர்கள் 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
- குடும்ப வருமானம் ஆண்டிற்கு 4 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
- இப்பயிற்சியானது மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
இலவச பயிற்சி
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கி பயிலவும், உணவு மற்றும் தங்கும் இடத்திற்கான கட்டணத் தொகையும் 11 மாதங்களுக்கு தங்கி பயில பயிற்சிக்கான தொகையினை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.
கடந்த ஆண்டில் 30 மாணவர்கள் தங்கி பயின்று அதில் 26 மாணவர்கள் தேர்ச்சி பெற்று IIT, NIT போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் சேர தகுதி பெற்றுள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளத்தில் (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 6-வது தளத்தில் அமைந்துள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகவும். தொலைபேசி எண்: 04364-211217 மற்றும் 7448828509.
கல்வி வாய்ப்பு
தாட்கோ மற்றும் CPCL நிறுவனங்களின் இந்த கூட்டு முயற்சியானது, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. JEE Mains தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம், மாணவர்கள் IIT, NIT போன்ற உயரிய கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளைப் படிக்க முடியும். இது அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் எனவும், தகுதியான மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களது கல்வி மற்றும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பயிற்சியின் முக்கியத்துவம்
JEE Mains தேர்வு என்பது இந்தியாவில் உள்ள உயரிய பொறியியல் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வாகும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும். தாட்கோ மற்றும் CPCL நிறுவனங்களின் இந்த கூட்டு முயற்சியானது, மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதன் மூலம், அவர்கள் தேர்வில் வெற்றி பெற உதவும்.
பயிற்சியின் பயன்கள்
- சிறந்த பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்.
- தங்கும் இடம் மற்றும் உணவு இலவசம்.
- IIT, NIT போன்ற உயரிய கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பு.
- மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உறுதுணை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

