CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
IPL 2025 CSK vs MI: ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன.

IPL 2025 CSK vs MI: ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் 2025:
டி20 கிரிக்கெட்டின் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின், நடப்பாண்டு எடிஷன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான கொல்கத்தாவை ஊதி தள்ளி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. அதைதொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையான இன்று ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. குறிப்பாக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் மும்பை மற்றும் சென்னை இடையேயான போட்டியும் இன்று நடைபெற உள்ளது. முன்னதாக ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இன்றைய இரண்டாவது லீக் போடிட்யில் மோத உள்ளன.
சென்னை Vs மும்பை:
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. சென்னை அணி கெய்க்வாட் தலைமையில் இந்த தொடரில் களமிறங்குகிறது. மும்பை அணியை பொறுத்தவரையில் முதல் போடிட்யில் மட்டும் ஹர்திக் பாண்ட்யாவிற்கு பதிலாக, சூர்யகுமார் யாதவ் தலைமை தாங்க உள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஸ்டார் செயலியிலும் கண்டுகளிக்கலாம். ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளான இரண்டும் கடந்த முறை பிளே-ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறாதது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கி, முதல் போட்டியிலேயே வெற்றியை பறிக்க தீவிரம் காட்டுகின்றன.
கெய்க்வாட் Vs சூர்யகுமார் யாதவ்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்தியா - பாகிஸ்தான் என்றால், ஐபிஎல் போட்டிகளுக்கு சென்னை மற்றும் மும்பை இடையேயான போட்டியாகும். சென்னை அணி வழக்கம்போல இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களின் கலவையாக உள்ளது. தோனி, கான்வே, கெய்க்வாட், துபே மற்றும் திரிபாதி ஆகியோர் பேட்டிங்கில் வலுசேர்க்க, அஷ்வின், பதிரனா, கலீல் அஹ்மது ஆகியோர் பவுலிங் ஆர்டர்ல் இடம்பெற்றுள்ளனர். அதேநேரம், சாம் கரண் மற்றும் ஜடேஜா போன்ற ஆல்-ரவுண்டர்கள் இருப்பது சென்னை அணியின் கூடுதல் பலமாக அமைகிறது.
மும்பை அணியை பொறுத்த்தவரையில் அதிரடி பேட்டிங்கிற்கு பஞ்சமில்லாத லைன் - அப்பை கொண்டுள்ளது. ரோகித் சர்மா,சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, வில் ஜாக்ஸ் மற்றும் நமன் திர் ஆகியோர் வரிசை கட்டி நிற்கின்றனர். ட்ரெண்ட் போல்ட், தீபக் சாஹர் மற்றும் போஸ்க் ஆகியோர் பந்துவீச்சில் மிரட்ட காத்திருக்கின்றனர். அண்மையில் நடந்த சாம்பியன்ஸ் ட்ராபியில் நியூசிலாந்தை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற, மிட்செல் சாண்ட்னர் மும்பையின் புதிய பலமாக இணைந்துள்ளார். அதேநேரம், பும்ரா முதல் சில போட்டிகளில் பங்கேற்காதாதும், கேப்டன் ஹார்திக் முதல் போட்டியில் இல்லாததும் மும்பை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
சேப்பாக்கம் மைதானம் எப்படி?
சேப்பாக்கம் ஆடுகளத்தின் மேற்பரப்பு சமநிலையானதாக இருக்கும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல உதவியாக இருக்கும், பந்து பழையதாகும்போது பேட்டிங் கடினமாகிவிடும். இரு அணிகளும் இந்த இடத்தில் சேஸ் செய்வதையே விரும்புவார்கள். இதுவரை இங்கு நடந்துள்ள 85 ஐபிஎல் போட்டிகளில் 49 முறை முதலில் பேஎட்டிங் செய்த அணியும், 36 முறை இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன.
நேருக்கு நேர்
ஐபிஎல் வரலாற்றில் மிமும்பை மற்றும் சென்னை அணிகள், இதுவரை 37 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை அணி 20 முறையும், சென்னை அணி 17 முறையும் வெற்றி பெற்றுள்ளன. சென்னையின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் நடைபெற்றுள்ள 8 போட்டிகளில் மும்பை அணி ஐந்தில் வெற்றி பெற்றுள்ளன. ஐபிஎல் இறுதிப்போடிட்யில் இரு அணிகளும் இதுவரை 4 முறை மோதியுள்ளன. அதில் சென்னை அணி ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் பிளே-ஆஃப் சுற்றுகளில் மும்பையை எதிர்கொண்ட 5 போட்டிகளில், சென்னை அணி 3 முறை வெற்றி பெற்றுள்ளது.
சூர்யகுமார் தீர்த்து வைப்பாரா?
மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2012ம் ஆண்டு முதல் ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் போட்டியில் வெற்றிபெறவே இல்லை என்ற மோசமான வரலாற்றை தொடர்கிறது. ரோகித் மற்றும் ஹர்திக் பாண்ட்யா என்ற இரண்டு தலைமையின் கீழும் அவர்களின் முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. இந்நிலையில், 13 ஆண்டுகளாக தொடர்ந்து முதல் போட்டியில் கண்டு வரும் தோல்வியை, இன்றைய போட்டியின் மூலம் சூர்யகுமார் யாதவ் முடித்து வைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது.
உத்தேச பிளேயிங் லெவன்:
சென்னை: எம்எஸ் தோனி , டெவோன் கான்வே , ஆர்டி கெய்க்வாட் (கேப்டன்) , எஸ் துபே , ஆர்ஏ திரிபாதி , ஆர்ஏ ஜடேஜா , எஸ்எம் குர்ரன் , ரவிச்சந்திரன் அஷ்வின் , மதீஷா பத்திரனா , நூர் அகமது , கேகே அகமது
மும்பை: ஆர்.டி. ரிக்கல்டன் (wk) , ராபின் மின்ஸ்க் , ரோஹித் சர்மா , எஸ்.ஏ. யாதவ் (C) , திலக் வர்மா , WG ஜாக்ஸ் , நமன் திர் , மிட்செல் சாண்ட்னர் , டிரென்ட் போல்ட் , டி.எல். சாஹர் , சி. போஷ்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

