மேலும் அறிய
Sakshi Agarwal: ஜன்னல் எல்லாம் ஓல்டு மாடல்! கதவே வைத்த ஜாக்கெட்டில் ஹார்ட் பீட்டை எகிற வைத்த சாக்ஷி அகர்வால்!
நடிகை சாக்ஷி அகர்வால், ஃபேன்சி சேலையில் கியூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார். இதுகுறித்த போட்டோஸ் இதோ..

சாக்ஷி அகர்வால் புகைப்படம்
1/9

அட்லீ இயக்கத்தில் 2013-ஆம் ஆண்டு வெளியான 'ராஜா ராணி' படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால்.
2/9

திரைப்படங்களில் நடிக்க வரும் முன், பிரபல ஐடி கம்பெனியில் பணிபுரிந்தார். தன்னுடைய காஸ்டியூம் முதல் மேக்கப் வரை அனைத்துக்கும் இவர் செலுத்தும் தனி கவனம், இவர் மாடலில் துறையில் நுழைய காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
3/9

மாடலிங் செய்து கொண்டே, பட வாய்ப்பை தேடியவருக்கு தமிழில் எடுத்த எடுப்பில் பெரிய ரோல் கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்த வாய்ப்புகளை தவிர்த்து விடாமல் நடித்தார்.
4/9

இதை தொடர்ந்து யோகன், திருட்டு விசிடி போன்ற படங்களில் படம் முழுவதும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடித்தாலும், இந்த படங்கள் பெரிதாக கவனம் பெறவில்லை.
5/9

அந்த சமயத்தில் தான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பு இவரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிச்சியமாக்கியது.
6/9

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாக்ஷி அகர்வால், கவினை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். சாக்ஷி என்னவோ உண்மையாக லவ் பண்ணினாலும், கவின் கண்ணு லாஸ்லியா மேல் விழுந்தது.
7/9

காதல் டிராக் குறுக்கிட்டதால், சாக்ஷி கேமில் கவனம் செலுத்தாமல் கவினை வஞ்சம் தீர்க்கும் எண்ணத்துடன் சுற்றிவந்ததால், மக்களே நீ வீட்டுக்கு போமா 49 நாட்களில் வெளியேற்றினர்.
8/9

தற்போது திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு தன்னுடைய கேரியரில் வளர்ந்துள்ள சாக்ஷி அடிக்கடி, விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
9/9

அந்த வகையில் தற்போது கிரீன் கலர் ட்ரான்ஸ்பரென்ட் சேலையில், டீப் நெக் ஜாக்கெட் அணிந்து வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அதே போல் அவரின் கதவு வச்ச ஜாக்கெட் தான் ஹை லைட்.
Published at : 21 Dec 2024 11:46 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement