மேலும் அறிய
Bala 25 Years: 'வணங்கான்' இசை வெளியீட்டு விழாவில் பாலாவை கொண்டாடிய நடிகர்கள்! போட்டோஸ்!
இயக்குனர் பாலாவின் 25-ஆம் ஆண்டு விழா மற்றும் வணங்கான் படத்தின் ஆடியோ லாஞ்சின் புகைப்படங்கள் இதோ

பாலா 25 மற்றும் வணங்கான் ஆடியோ இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்
1/10

இயக்குனர் பாலா 1999-ஆம் ஆண்டு வெளியான 'சேது' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். விக்ரம் ஹீரோவாக நடித்திருந்த இந்த படம், தமிழக அரசின் விருது முதல் தேசிய விருது பெற்று, இயக்குனர் பாலாவை முதல் படத்திலேயே முன்னணி இயக்குனராக மாற்றியது.
2/10

ஒரே மாதிரி படம் இயக்கி வந்த இயக்குனர்கள் மத்தியில் பாலாவும், அவரின் படைப்புகளும் தனித்து தெரிய துவங்கியது. பாலாவின் முதல் படம் ஏற்படுத்திய தாக்கம், இவருடைய இரண்டாவது படம் மற்றும் ஹீரோ யாராக இருக்கும் என ரசிகர்களை எதிர்பார்க்க வைத்தது. சேது படம் வெளியான இரண்டு வருடங்களுக்கு பின்னர், நடிகர் சூர்யாவை தன்னுடைய கதாநாயகனாக தேர்வு செய்த பாலா, 'நந்தா' படத்தை இயக்கினார்.
3/10

காதல் படங்களில் நடித்து, சாக்லேட் பாய்யாக பார்க்கப்பட்ட சூர்யாவை ஒரு டெரெர் சூர்யாவாக இந்த படத்தில் காட்சி படுத்தினார். இந்த திரைப்படம் சூர்யாவுக்கு பல விருதுகளை பெற்று தந்தது மட்டும் இன்றி, சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
4/10

இது குறித்து நடிகர் சூர்யா இன்று நடந்த, வணங்கான் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கூட மிகவும் உருக்கமாக பேசி இருந்தார். அன்று பாலா தனக்கு போன் செய்து இந்த வாய்ப்பை கொடுக்கவில்லை என்றால், காக்க காக்க முதல் கஜினி வரை பல படங்களை இழந்திருப்பேன் என எமோஷனலாக பேசி உள்ளார்.
5/10

நந்தா படத்தை தொடர்ந்து, மீண்டும் பிதாமகன் படத்தில் சூர்யாவுக்கு வாய்ப்பு கொடுத்த பாலா, அவரை ஒரு படு லோக்கலான ஆளாக காட்டி, சூர்யாவால் இப்படிப்பட்ட சில வேடங்களில் கூட திறமையான நடிப்பை வெளிப்படுத்த முடியும் என, ரசிகர்களுக்கு காட்டினார்.
6/10

பாலாவின் படங்களில் நடிப்பது மிகவும் கடினம் என பல நடிகர்கள் சொல்வார்கள். தான் எதிர்பார்க்கும் நடிப்பு நடிகர்களிடம் இருந்து கிடைக்கவில்லை என்றால் மனுஷன் இரண்டு வாரம் ஆனாலும், அதே காட்சியை பல ரீ-டேக் எடுத்து ஒருவழி செய்து விடுவார்.
7/10

இப்படி பல கஷ்டங்களை தங்கியதால் மட்டுமே, இன்று சூர்யா மிகவும் பக்குவமான ஒரு நடிகராகவும்... எப்படி பட்ட வேடங்களையும் திறம்பட வெளிப்படுத்தும் ஆளுமையோடு வளர்ந்துள்ளார்.
8/10

மேலும் நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா, இப்போது வணங்கான் என எண்ணி 10 படங்கள் மட்டுமே இவர் இந்த 25 வருடங்களில் இயக்கி இந்தாலும், இவரின் ஒவ்வொரு படைப்புகளும் தனித்துவமானது.
9/10

வர்மா படம் மட்டும், 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீ-மேக்காக எடுக்கப்பட்டு, பின்னர் அது பாலாவுக்கே பிரச்சனையாக மாறியது தனி கதை. தன்னுடைய 10-ஆவது படமாக இப்போது இயக்குனர் பாலா இயக்கி உள்ள 'வணங்கான்' படம் கூட கடந்த 2022-ஆம் ஆண்டு சூர்யாவை வைத்து இயக்குனர் பாலா பூஜை போட்ட படம் தான். படப்பிடிப்பு ஒரு மாதம் நடந்த நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்து சூர்யா விலகினார்.
10/10

பின்னர் பாலா தரப்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டது. சூர்யா விலகிய பின்னர் தற்போது அருண் விஜய்யை வைத்து இந்த படத்தை இயக்கி முடித்துளளார். அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷ்ணி பிரகாஷ் நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, ஜான் விஜய், மிஷ்கின், உள்ளிட்ட மிக பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது. பாலாவின் 25 வருட கொண்டாட்டமாகவே, இன்று நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 'வணங்கான்' ஆடியோ லான்ச் நடந்துள்ளது. இதில் சூர்யாவை தவிர, சிவகார்த்திகேயன், இந்த படத்தின் ஹீரோவான அருண் விஜய், நடிகர் சிவகுமார், விஜய குமார், சமுத்திரகனி, விக்ரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
Published at : 19 Dec 2024 12:03 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion