மேலும் அறிய

Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?

உலக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறை, சாப்ட்வேர் துறை ஆகியவற்றில் சென்னை மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். கூகுள் மற்றும் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் சி.இ.ஓ-வாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை இருந்து வருகிறார். அந்த வகையில் சென்னையை சேர்ந்த அமெரிக்கா தொழிலதிபரான, ஸ்ரீராம் கிருஷ்ணன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையில் பிறந்தவர். இவர் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பி.டெக் இளங்கலை படிப்பு முடித்துள்ளார். படிப்பு முடிந்த சில நாட்களிலே அமெரிக்கா சென்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தனது 21 வயதிலேயே பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து யாகூ, பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார். இது மட்டும் இல்லாமல் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களான சேட் ஜி.பி.டி, ஓபன் ஏ.ஐ. உள்ளிட்ட தளங்களிலும் பணியாற்றினார்.

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க வாங்கிய பிறகு அதன் பெயரை X வலைதளமாக மாற்றினார். இதனைத் தொடர்ந்து ட்விட்டர் தளத்தை எலான் மஸ்க் மறுசீரமைப்பு பணியை மேற்கொண்ட போது, அந்த பொறுப்பு ஸ்ரீராம் கிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. 

அமெரிக்கா தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. புதிதாக அதிபராக பொறுப்பேற்க உள்ள டிரம்ப் ஏ.ஐ தொழில் நுட்பத்தில் தனிக் கவனம் செலுத்த உள்ளாராம். ஏ.ஐ. தொழில்நுட்பம் தற்போது உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி அடைந்ததிலிருந்து, உலகம் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் செயற்கை தொழில்நுட்பத்தை கையாளுவது குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து டிரம்ப் அடுத்த மாதம் 20ஆம் தேதி அதிபராக பதவி ஏற்க உள்ளார். முன்னதாக பல்வேறு துறை ரீதியான ஆலோசனை வழங்கும் அதிகாரிகளை டிரம்ப் நியமித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக செயற்கை நுண்ணறிவு குறித்து ஆலோசனை வழங்குவதற்காக, ஏ.ஜ., தொழில்நுட்பத்தின் மூத்த அரசு ஆலோசகராக சென்னை சேர்ந்து ஸ்ரீராம் நவநீதகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இதில் அதிக அனுபவம் உள்ள நபர்க ஆலோசர்களாக வேண்டும் என்பதால், ஸ்ரீராம் கிருஷ்ணன் தற்போது ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகள் வீடியோக்கள்

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 695 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 695 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
மயிலாடுதுறை அருகே வங்கக்கடலில் எண்ணெய்க் கிணறு: அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது - அன்புமணி வலியுறுத்தல்
மயிலாடுதுறை அருகே வங்கக்கடலில் எண்ணெய்க் கிணறு: அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது - அன்புமணி வலியுறுத்தல்
தஞ்சையில் 10 அடி உயரத்தில் விஸ்வரூப விநாயகர்: 21 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்
தஞ்சையில் 10 அடி உயரத்தில் விஸ்வரூப விநாயகர்: 21 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (15-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (15-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெல்கம் பேக் மக்களே! தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்! கூட்டம் அள்ளுது!
வெல்கம் பேக் மக்களே! தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்! கூட்டம் அள்ளுது!
Anna police Medals : காவல் துறையினர் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! அசத்தலான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு
காவல் துறையினர் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! அசத்தலான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு
Udhayanidhi : பெரியார்,அண்ணாவுக்கு தடை.! காவல்துறை CM கட்டுப்பாட்டிலா? காவி எஜமானர்களின் கட்டுப்பாட்டிலா? – உதயநிதி கேள்வி
பெரியார்,அண்ணாவுக்கு தடை.! காவல்துறை CM கட்டுப்பாட்டிலா? காவி எஜமானர்களின் கட்டுப்பாட்டிலா? – உதயநிதி கேள்வி
ஸ்டாலின் போட்ட ஒரே ஒரு போன்.! திமுகவிற்கு கை கொடுத்த தேமுதிக- பிரேமலதா அதிரடி அறிவிப்பு
ஸ்டாலின் போட்ட ஒரே ஒரு போன்.! திமுகவிற்கு கை கொடுத்த தேமுதிக- பிரேமலதா அதிரடி அறிவிப்பு
பெற்ற மகனை ஸ்டாலின் முறையாக வளர்க்கவில்லை .! கீழ்த்தரமாக பேசுவது தான் திமுகவின் DNA- அமைச்சர் ரமேஷ்
பெற்ற மகனை ஸ்டாலின் முறையாக வளர்க்கவில்லை .! கீழ்த்தரமாக பேசுவது தான் திமுகவின் DNA- அமைச்சர் ரமேஷ்
Honda Shine Sales: அடேங்கப்பா.! விற்பனையில் சக்கை போடு போட்ட ஹோண்டா ஷைன்.! ஒரே மாசத்துல லட்சக்கணக்கில் சேல்ஸா.?!
அடேங்கப்பா.! விற்பனையில் சக்கை போடு போட்ட ஹோண்டா ஷைன்.! ஒரே மாசத்துல லட்சக்கணக்கில் சேல்ஸா.?!
Trump Vs Zelensky: ஜெலன்ஸ்கிக்கு ஷாக் கொடுத்த ட்ரம்ப்.! ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்கு ஆர்டர் போட்ட ட்ரம்ப்; என்ன அது.?
ஜெலன்ஸ்கிக்கு ஷாக் கொடுத்த ட்ரம்ப்.! ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்கு ஆர்டர் போட்ட ட்ரம்ப்; என்ன அது.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! புதன் கிழமை (16.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே.! புதன் கிழமை (16.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
Embed widget