EPS: "அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்... கோட்டைவிட்ட திமுக... பாயிண்டாக பேசிய எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் உள்ள 12,524 ஊராட்சிகளிலும், 528 பேரூராட்சிகளிலும், அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் 76 கோடியில் நிறைவேற்றினோம். காலப்போக்கில் திமுக அரசு கைவிட்டு விட்டது என குற்றம் சாட்டினார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள வேலகவுண்டனூர் பகுதியில், அதிமுக சார்பில் தென்னிந்திய அளவிலான 3 நாள் கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியினை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அதிமுக ஆட்சியில் இளைஞர்கள் நலன் காக்க, விளையாட்டில் ஆர்வம் செலுத்த பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் உள்ள 12,524 ஊராட்சிகளிலும், 528 பேரூராட்சிகளிலும், அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் 76 கோடியில் நிறைவேற்றினோம். காலப்போக்கில் திமுக அரசு கைவிட்டு விட்டது. அதேபோல விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு, அதிமுக ஆட்சியில் ஊக்கத் தொகையாக 38 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. மேலும், 64 கோடி ரூபாய் தமிழ்நாடு உடற்கல்விகள் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில், உயர் இயந்திரவியல் இறகுப்பந்து, மேஜிக் பந்து, முதமை நிலை மையங்கள், சிலம்பம் பயிற்சி மையம், குடியிருப்புகள் அமைத்து விளையாட்டு வீரர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
சிறந்த தேசிய மாணவர் படை மாணவருக்காக ஆண்டு உதவி தொகை ரூபாய் 3 லட்சத்திலிருந்து, 15 லட்சமாக உயர்த்தப்பட்டது. விளையாட்டு திறமையின் அடிப்படையில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்லக்கூடிய தலைசிறந்த ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களுக்கு தேவைக்கேற்ப உதவி செய்து, அவர்களை ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்கள் வெல்வதற்கு வழிவகை செய்யும் வகையில், சர்வதேச அளவில் பதக்கம் பெரும் நோக்கம் திட்டம் என்ற ஒரு திட்டத்தை துவங்கி 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 5 உயர்நிலை விளையாட்டு வீரர்களுக்கு தலா 10 லட்சம் அளவில் அடிப்படை வசதி வழங்கப்பட்டது" என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர், ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

