IPL 2025 SRH vs RR: வெற்றியுடன் தொடங்குமா சன்ரைசர்ஸ்? பவுலிங்கில் கலக்குமா பராக் படை?
IPL SRH vs RR 2025: ஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்து ஆடி வருகிறது.

ஐபிஎல் 18வது சீசனின் இரண்டாவது போட்டி இன்று ஹைதரபாத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கும் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு காயம் காரணமாக அவருக்கு பதிலாக ரியான் பராக் கேப்டனாக களமிறங்கியுள்ளார். இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
ப்ளேயிங் லெவன்:
முதன்முறையாக கேப்டனாக களமிறங்கியுள்ள ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜெய்ஸ்வால், சுப்மன் துபே, நிதிஷ் ராணா, துருவ் ஜோயல், ஹெட்மெயர், ஆர்ச்சர், தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப்சர்மா, பரூக்கி ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதரபாத் அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் ரெட்டி, கிளாசென், அனிகெட்வர்மா, அபினவ் மனோகர், சிமர்ஜித் சிங், ஹர்ஷல் படேல், முகமது ஷமி ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
பலம், பலவீனம் என்னென்ன?
ராஜஸ்தான் அணியை காட்டிலும் ஹைதரபாத் அணி பலமானதாக கருதப்படுகிறது. அந்த அணியின் பேட்டிங் பலமாக உள்ளது. அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் ரெட்டி, கிளாசென் பேட்டிங் பலமாக உள்ளனர். பவுலிங்கில் முகமது ஷமி பலமாக உள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் இம்பேக்ட் வீரராக களமிறங்குகிறார். ஜெய்ஸ்வால், துபே, நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜோரல், ஹெட்மயர் பேட்டிங் பலமாக உள்ளனர். பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே, தீக்ஷனா, பரூக்கீ சிறப்பாக வீச வேண்டியது அவசியம் ஆகும். ஆர்ச்சர், சந்தீப் சர்மா சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
வெற்றி பெற போராட்டம்:
கடந்த முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஹைதரபாத் அணி இந்த முறையும் வெற்றியுடன் தொடரை தொடங்க முனைப்பு காட்டும். ராஜஸ்தான் அணி முதல் சாம்பியன் பட்டத்தை பெற்ற பிறகு இதுவரை சாம்பியன் பட்டம் பெற்றது இல்லை. இதனால், அவர்களும் இந்த தொடரை வெற்றியுடன் தொடங்க முழு முனைப்புடன் களமிறங்குகின்றனர்.
காயம் அடைந்துள்ள கேப்டன் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் பேட்டிங் செய்யும்போது தொடக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த போட்டியில் அவர் மீண்டும் கேப்டனாக ராஜஸ்தான் அணிக்கு களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

