UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
சில கல்வி நிறுவனங்கள், யுஜிசி விதிகளுக்கு மாறாக பட்டங்களை வழங்குவதாகப் புகார் எழுந்துள்ளது. அவ்வாறு வழங்கப்படும் பட்டங்கள் அனைத்தும் உயர் கல்விக்கோ வேலை வாய்ப்புக்கோ தகுதியானவை அல்ல.

யுஜிசி சட்ட விதிகளை மீறி, அங்கீகாரம் இல்லாமல் வழங்கப்படும் பட்டப் படிப்புகளுக்கு வேலை கிடையாது மற்றும் உயர் கல்விக்குத் தகுதி பெற்றது ஆகாது என்று யுஜிசி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களைக் கண்காணித்து, அவற்றின் தரத்தை மேம்படுத்தி வருகிறது. யுஜிசி அங்கீகாரம் பெற்றே, கல்வி நிறுவனங்கள் இயங்க முடியும்.
யுஜிசி, கல்லூரிகள் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் இயங்குவதைக் கண்காணிப்பதோடு, நிதி உதவியும் செய்து வருகிறது.
இந்த நிலையில் யுஜிசியின் கண்காணிப்பை மீறி போலி பல்கலைக்ககழகங்கள் இயங்கி வருகின்றன. இவை தாண்டி பல்வேறு கல்வி நிலையங்களில் யுஜிசி அங்கீகாரம் இல்லாமல், சில பட்டப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து யுஜிசிக்கு, பல்வேறு தரப்பிடம் இருந்து புகார்கள் சென்றன.
இதைத் தொடர்ந்து, அங்கீகாரம் இல்லாமல் வழங்கப்படும் பட்டப் படிப்புகளுக்கு வேலை கிடையாது மற்றும் உயர் கல்விக்குத் தகுதி பெற்றது ஆகாது என்று யுஜிசி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து யுஜிசி செயலர் மணிஷ் ஜோஷி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் முக்கியமான தகவல் தெரிவிக்கப்படுகிறது.
யுஜிசி சட்டம், 1956 விதிகளின்படி, மாநிலச் சட்டம் மற்றும் மத்தியச் சட்டங்களின்கீழ் மட்டுமே பல்கலைக்கழகங்கள் பட்டப் படிப்பை வழங்க முடியும்.
எனினும் சில கல்வி நிறுவனங்கள், யுஜிசி விதிகளுக்கு மாறாக பட்டங்களை வழங்குவதாகப் புகார் எழுந்துள்ளது. அவ்வாறு வழங்கப்படும் பட்டங்கள் அனைத்தும் உயர் கல்விக்கோ வேலை வாய்ப்புக்கோ தகுதியானவை அல்ல.
எனவே மாணவர் சேர்க்கையைத் தொடங்கும் முன் மாணவர்களும் பெற்றோர்களும் யுஜிசி இணையதளத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விதியை மீறும் கல்வி நிறுவனங்கள் குறித்து ugcampc@gmail.com என்ற இ- மெயில் முகவரிக்கு புகார் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

