"ஒரே ஜெயில்தான் வேணும்" கணவரை தீர்த்து கட்டிய மனைவி.. சிறையில்கூட காதலருடன்தான் இருப்பேன் என அடம்
உபியில் பெண் ஒருவர், தன்னுடைய காதலருடன் சேர்ந்து கணவரை கொலை செய்துள்ளார். சிறைக்கு சென்ற அவர், காதலுருடன் ஒரே சிறையில்தான் இருப்பேன் என அடம் பிடித்துள்ளார்.

போதைக்கு அடிமையான பெண் ஒருவர், தன்னுடைய காதலருடன் சேர்ந்து கணவரை கொலை செய்துள்ளார். சிறைக்கு சென்ற அவர், காதலுருடன் ஒரே சிறையில்தான் இருப்பேன் என அடம் பிடித்துள்ளார். ஆனால், சிறை விதிகளின்படி ஆணும் பெண்ணும் ஒரே சிறையில் அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
போதையில் கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி:
உத்தரப் பிரதேசம் மீரட்டை சேர்ந்தவர் முன்னாள் கடற்படை அதிகாரி சவுரப் ராஜ்புத். கடந்த இரண்டு ஆண்டுகளாக லண்டனில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி முஸ்கான். இவர், சாஹில் என்ற வேறொரு நபருடன், திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார்.
கடந்த வாரம், தனது கணவர் சவுரப் ராஜ்புத்தை கொலை செய்ததாக முஸ்கானும் சாஹிலும் கைது செய்யப்பட்டனர். தனது ஆறு வயது மகளின் பிறந்தநாளை கொண்டாட வீட்டிற்கு வந்த சவுரப்பை இருவரும் சேர்ந்து கொலை செய்திருக்கின்றனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "கடந்த மார்ச் 4 ஆம் தேதி, சவுரப்புக்கு போதை மருந்து கொடுத்து குத்திக் கொலை செய்துள்ளார் முஸ்கான். பின்னர், அவரும் சாஹிலும் இணைந்து, சவுரப் உடலை 15 துண்டுகளாக வெட்டி, டிரம்மில் போட்டு, அதன் மேல் ஈரமான சிமெண்டை வைத்து மூடியுள்ளனர்.
"காதலருடன்தான் இருப்பேன்"
பின்னர், இருவரும் இமாச்சலப் பிரதேசத்திற்குச் சென்றனர். அங்கு சவுரப்பின் தொலைபேசியைப் பயன்படுத்தி அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரையும் ஏமாற்றியுள்ளனர். சமூக ஊடகங்களில் சில படங்களை பகிர்ந்துள்ளனர். பின்னர், தானும் சாஹிலும் சவுரப்பைக் கொன்றதாக முஸ்கானின் பெற்றோரிடம் ஒப்பு கொண்டனர்" என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கைதாகி சிறையில் உள்ள முஸ்கான், தன்னுடைய காதலருடன் ஒரே சிறையில்தான் இருப்பேன் என அடம் பிடித்துள்ளார். ஆனால், சிறை விதிகளின்படி ஆணும் பெண்ணும் ஒரே சிறையில் அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து மீரட் சவுத்ரி சரண் சிங் மாவட்ட சிறைச்சாலை அதிகாரிகள் கூறுகையில், "இருவரும் சிறை அதிகாரிகளிடம் ஒரே முகாமில் தங்க விரும்புவதாக சொன்னார்கள். ஆனால், அதிகாரிகள் சிறை விதிகளை மேற்கோள் காட்டி இதை அனுமதிக்க முடியாது என்று கூறினர்.
மருத்துவ பரிசோதனையில் அவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்பது தெரியவந்தது. போதை பொருளை திடீரென நிறுத்தியதால் சில சிரமங்களை சந்தித்து வருகின்றனர். வர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

