அமிதாப் பச்சன் ஒரு சர்வாதிகாரி...கமலுக்கு எதிராக திட்டம்போட்டு அதை செய்தார்...உண்மையை உடைத்த பிரபலம்
கமலை வைத்து படம் எடுத்தால் அந்த படம் ட்ராப் ஆகிடும் என்கிற நெகட்டிவ் இமேஜை பாலிவுட்டில் அமிதாப் பச்சன் உருவாக்கியதாக டாக்டர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்

மருத்துவர் மற்றும் அரசியல் விமர்சகரான டாக்டர் காந்தராஜ் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனைப் பற்றி பேசியுள்ள வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது
அமிதாப் பச்சன் ஒரு சர்வாதிகாரி
இந்த வீடியோவில் அவர் " அமிதாப் பச்சன் மாதிரி ஒரு சர்வாதிகாரி. ஒரு முறை அவர் படத்திற்கு பத்திரிகை விமர்சனம் ஒன்றை வெளியிட்டது. அடுத்த நாளே தவறுதலாக அந்த விமர்சனத்தை வெளியிட்டதாக பத்திரிகை நிறுவனத்தை மன்னிப்பு கேட்கவைத்தார்.
கமலின் வளர்ச்சியை தடுத்தாரா அமிதாப் பச்சன் ?
இந்தியில் கமல் நடித்த ஏக் தூஜே கே லியே திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கமல் இந்தி சினிமாவிற்கு வந்தால் தனக்கு மார்கெட் குறைந்துவிடும் என்று அமிதாப் நினைத்தார். பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தை இந்தியில் வெளியிட்டார்கள். அந்த படத்தை வெளியிட திரையரங்கம் கிடைக்கவிடாமல் செய்தார்.
" இந்தியில் கமல்ஹாசனை ஓரம் கட்டினார்கள். அமிதாப் பச்சன் கமலை வரவிடாமல் செய்ய என்ன முடியுமோ அதெல்லாம் செய்தார். சென்னையில் ஒரு இந்தி படத்தின் தயாரிப்பு வேலைகள் நடந்தது. அந்த படத்தில் அமிதாப் தான் ஹீரோ. கமல் செகண்ட் ஹீரோ ஶ்ரீதேவிதான் ஹீரோயின். எதெச்சையாக நான் கமலைப் பார்க்க ஏ.வி.எம் ஸ்டுடியோ சென்றிருந்தேன். அப்போது அங்கு ஶ்ரீதேவியும் இருந்தார். என்ன படம் என்று நான் கமலிடம் கேட்டேன். அவர் அமிதாப் தான் ஹீரோ நான் செகண்ட் ஹீரோவாக நடிக்கிறேன் என்று சொன்னார். பேசிக்கொண்டிருந்த போது இந்த படம் வரும் என்று எனக்கு தோனல என்று என்னையே அறியாமல் நான் கமலிடம் சொன்னேன். அதேமாதிரி பாதி படம் எடுத்து முடித்தபோது படத்தை ட்ராப் பண்ணாங்க. கமலை வைத்து படம் எடுத்தால் அந்த படம் ட்ராப் ஆகும். கமல் ஒரு துரதிர்ஷ்டம் பிடித்தவர் என்கிற நெகட்டிவ் இமேஜை அவர் மீது உருவாக்கினார்கள். உடனே அடுத்து அந்தா கானுன் படத்தில் ரஜினியை நடிக்க வைத்து அவரை தூக்கிவிட பார்த்தார்கள். ஆனால் ரஜினி ஒரு சில படங்களில் நடித்து வந்துவிட்டார். அன்றைய சூழலில் அமிதாப் பச்சனுக்கு சினிமா பின்னணி மற்றும் அரசியல் பின்னணி இருந்தது. கமல் அவரை எதுவும் பண்ண முடியாது.
பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே , கிழக்கே போகும் ரயில் ஆகிய இரு படங்களை வெளியிட விடாமல் செய்தார்கள். கிராமிய படங்கள் வந்தால் அமிதாப் பச்சன் படங்களுக்கு வரவேற்பு கிடைக்காது என்று அப்படி செய்தார்கள்" என காந்தராஜ் தெரிவித்துள்ளார்
Already I have Uploaded Few videos about #Bollywood Industry against #KamalHaasan.
— KarthickHaasan (@karthickhaasan7) November 5, 2024
Here another Proof of that Incident💯. @ikamalhaasan Mind Voice "அந்த பயம் இருக்கனும் டா🤫".
Enga #Andavar Valarnthu vantha Nama Market Pogirumnu #AmitabhBachchan Bayantharu😄👌.#Ulaganayagan 🔥 pic.twitter.com/NYApe8lqQF





















