சினிமா பார்த்து மக்கள் கெட்டுப்போறாங்களா...பிருத்விராஜ் கொடுத்த செம விளக்கம்
எளிதில் டார்கெட் செய்ய முடியும் என்பதால் சினிமாவைப் பார்த்து மக்கள் கெட்டுப் போகிறார்கள் என பொதுப்படையாக மக்கள் விமர்சிக்கிறார்கள் என பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்

சினிமா குறிப்பாக இந்தியாவில் மக்களிடையே பெரியளவில் தாக்கம் செலுத்தக்கூடிய ஊடகம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நடிகர்களை கடவுள் அளவிற்கு உயர்த்தி பிடிக்கும் ரசிகர்கள் இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறார்கள். சினிமாவில் நடிகர்கள் அணியும் ஆடை முதல் அவர்கள் மேனரிஸம் வரை குழந்தைகளிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திகின்றன. அதே நேரத்தில் திரைப்படங்களில் வரும் வன்முறை காட்சிகள் நிஜ வாழ்க்கையில் வன்முறை சம்பவங்களை ஊக்குவிப்பதாகவும் தொடர்ச்சியான விமர்சனங்கள் இருந்து வருகிறது. இது பற்றி நடிகர் பிருத்விராஜ் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்
நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான் சினிமா
" சினிமா ஒரு சாஃப்ட் டார்கெட் என்பதால் எல்லாரும் இஸியாக அதன் மேல் பழி போட்டுவிடுகிறார்கள். சமூகத்தில் என்ன நடந்தாலும் சினிமாவைப் பார்த்து கெட்டுபோயிட்டார்கள் என்று சொல்வார்கள். ஆனால் சினிமாவே சமூகத்தின் பிரதிபலிப்பு தான் என்பதை மறந்துவிடுகிறார்கள். சினிமா ஒன்றும் காற்றில் இருந்து உருவாகிவிடவில்லை. அதில் இருக்கும் கதாபாத்திரங்கள் , கதைகள் எல்லாம் சமுதாயத்தில் நடப்பதை பார்த்து எடுக்கப்படுகின்றன. சினிமா ஒரு கற்பனை என்றால் அந்த கற்பனை உருவாவது உங்களைச் சுற்றி இருக்கும் உலகத்தில் இருந்துதான் உருவாகிறது. லூசிஃபராக இருந்தாலும் சரி, மொழி யாக இருந்தாலும் சரி எந்த படமாக இருந்தாலும் அது உங்களைச் சுற்றி இருக்கும் மனிதர்கள் மற்றும் நிகழ்வுகளில் இருந்து உருவாவதுதான்." என பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்
இந்திய சினிமாவில் மிகவும் தனித்துவமான நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். தமிழில் மொழி , சத்தம் போடாதே, காவியத்தலைவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மலையாளம் , இந்தி , தமிழ் ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவை தவிர்த்து மோகன்லாலை வைத்து இவர் இயக்கிய லூசிஃபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. தற்போது இதன் இரண்டாவது பாகம் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தொடர்ச்சியாக தன் மீது வெறுப்பு இருந்து வருவது குறித்து பிருத்விராஜ் மனம் திறந்து பேசியுள்ளார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

