மேலும் அறிய

CSK vs MI: சென்னையின் சுழல் புயலா? மும்பையின் சிக்சர் மழையா? சேப்பாக்கத்தில் வெற்றி யாருக்கு? ஸ்கை Vs ருதுராஜ்

IPL 2025 CSK vs MI: ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் சுழற்பந்து வீச்சை மும்பை அணியின் வீரர்கள் தாக்குப்பிடிப்பார்களா? என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

IPL 2025 CSK vs MI: ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை Vs மும்பை:

ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் பரம எதிரிகளாக கருதப்படும், சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன. சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. சென்னை அணி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலும், முதல் போட்டியில் மட்டும் மும்பை அணி சூர்யகுமார் யாதவ் தலைமையிலும் களமிறங்குகிறது. சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான சேப்பாக்கம் மைதானத்தில், கோலோச்சுவதற்கு ஏற்ற வகையில் சென்னை அணியில் தரமான பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளன. அதனை அதிரடி பேட்டிங்கிற்கு பெயர்போன மும்பை அணி சமாளிக்குமா? என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

தொடரும் தோல்வி பயணம்:

தொடரை வெற்றிகரமாக தொடங்க வேண்டும் என்பதே ஒவ்வொரு அணியின் விருப்பமும் ஆகும். ஆனால், கடந்த 2012ம் ஆண்டு முதல், தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றதே இல்லை என்ற மோசமான வரலாற்று பயணத்தை மும்பை அணி தக்கவைத்துள்ளது. இந்த சூழலில் தான், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பாண்டிற்கான முதல் போட்டியில் மும்பை களமிறங்குகிறது. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா முதல் போட்டியில் இல்லாதது மும்பை அணியை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது. இதனால், மும்பை அணியின் தொல்விப் பயணம் முடிவுக்கு வருமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

சென்னையின் ஆதிக்கம்:

ஒட்டுமொத்தமாக ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 37 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை அணி 20 முறையும், சென்னை அணி 17 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், கடைசியாக இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 6 போட்டிகளில், சென்னை அணி ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் மும்பை அணி தோல்வியையே சந்தித்துள்ளது. 

சென்னையின் சுழல் புயல்:

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான சேப்பாக்கம் மைதானத்திற்கு ஏற்ப வலுவான பந்துவீச்சு அணியை சென்னை கட்டமைத்துள்ளது. அதன்படி, ஜடேஜா,நூர் அஹ்மது மற்றும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை அணிக்கு திரும்பியுள்ள அஷ்வின் ஆகியோரை சமாளிப்பது மும்பை அணிக்கு கடும் சவாலாக இருக்கக் கூடும். கூடுதல் வேகத்தில் இரண்டு பக்கங்களிலும் பந்தை திருப்பக் கூடிய வல்லமையை நூர் அஹ்மது கொண்டுள்ளார். மறுபுறம் சேப்பாக்கம் மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக அஷ்வின் (50 விக்கெட்டுகள்) திகழ்கிறார். ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் வீசுவதில் ஜடேஜா கைதேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் இன்றைய போட்டி மும்பை அணிக்கு கடும் சவலாக இருக்கும்.

மும்பையின் சிக்சர் மழை:

வலுவான பேட்டிங் ஆர்டருக்கான கடப்பாரை அணி என்றும் மும்பை வர்ணிக்கப்படும்.இந்த முறையும் ரோகித், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், நமன் திர், ராபின் மின்ஸ் என பேட்ஸ்மேன்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர். ஆனால்,  பொல்லார்ட், இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இல்லாதது மும்பை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. புதியதாக அணியில் இணைந்துள்ள ரியான் ரிக்கல்டன் மற்றும் தென்னாப்ரிக்காவின் ஆல்-ரவுண்டரான போஷ் ஆகியோர் முந்தைய ஜாம்பவான்களின் இடத்தை நிரப்புவார்களா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். சூர்யகுமார் யாதவ் கடைசியாக விளையாடிய டி20 போட்டிகளில் பெரியதாக சோபிக்கவில்லை. இந்த போட்டியின் மூலம் அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்புவாரா? என்பதும் கேள்வியாகவே உள்ளது.

மும்பை பவுலிங் யூனிட்

ட்ரெண்ட் போல்ட் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர், மும்பை அணிக்காக புதிய பந்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என கருதப்படுகிறது. இதனிடையே, காயம் காரணமாக ஓய்வில் உள்ள பும்ரா, ஏப்ரல் மாதம் தான் மும்பை அணியில் இணைவார் என கூறப்படுகிறது. அதுவரை, ஆந்திரா பிரீமியர் லீகில் டெத் ஓவர்களை வீசி கவனம் ஈர்த்த, சத்யநாராயண ராஜு மும்பை அணியில் முக்கிய பங்கு வகிப்பார் என கூறப்படுகிறது. சுழற்பந்துவீச்சில் மிட்செல் சாண்ட்னர் மற்றும் கரண் சர்மா பிரதான தேர்வுகளாக இருக்கலாம். தேவையின் அடிப்படையில் முஜீப் உர் ரஹ்மானை, இம்பேக் பிளேயராகவும் மும்பை அணி களமிறக்கலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
Trump Changes Election Rules: பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணிசெல்வப்பெருந்தகையை மாற்ற முடிவு? அண்ணாமலை IPS, -க்கு போட்டியாக IAS! சசிகாந்த்தை டிக் அடித்த ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
Trump Changes Election Rules: பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Karuppasamy Pandian Death: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
ரூ.25  லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
ரூ.25 லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
Embed widget