மேலும் அறிய

தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..

சென்னைக்கு தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.3.6 கோடி மதிப்புடைய 3.6 கிலோ பதப்படுத்தப்பட்ட உயரக, ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல். 

சென்னை பயணியின் சூட்கேஸ் ரகசிய அறைக்குள் வைக்கப்பட்டு இருந்த உயர்ரக கஞ்சாவை, சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, பயணியையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரகசிய தகவல்

தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கிலிருந்து, சென்னை வரும் தனியார் பயணிகள் விமானத்தில், பெருமளவு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக, சென்னை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அதோடு அவர்களுக்கு உதவியாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளும் செயல்பட்டனர். 

இதையும் படிங்க: Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!

இந்தநிலையில் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் இருந்து, தனியார் பயணிகள் விமானம் நேற்று முன் தினம் நள்ளிரவு வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து, சந்தேகத்துக்கு இடமான சென்னையைச் சேர்ந்த சுமார் 30 வயது ஆண் பயணி ஒருவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் இரண்டு தினங்களுக்கு முன்பு, சுற்றுலாப் பயணியாக, தாய்லாந்து நாட்டிற்கு சென்று விட்டு, மறுநாளே உடனடியாக சென்னைக்கு திரும்பி வந்தார். இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை விசாரித்த போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். 

உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா

இதை அடுத்து அவருடைய உடமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவருடைய சூட்கேசில் ரகசிய அறை இருந்ததை கண்டுபிடித்து, அதை உடைத்து பார்த்தபோது, அதனுள் 3.6 பதப்படுத்தப்பட்ட, உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.3.6 கோடி.

இதை அடுத்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், கஞ்சா கடத்தல் பயணியை கைது செய்தனர். அதோடு அவரிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை விசாரித்த போது, அவர் சர்வதேச போதை கடத்தும் கும்பலில், குருவியாக வேலை செய்கிறார் என்று தெரிந்தது. சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்த முக்கிய நபர்கள் சென்னையில் எங்கு இருக்கிறார்கள்? என்று விசாரணை நடத்தி, அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். 

இதையும் படிங்க: ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!

இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில், இதை போல் உயர்ரக பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி சென்னை சேர்ந்த பெண் பயணி ஒருவர் 2.8 ஒரு கிலோ மதிப்புடைய ஹைட்ரோ போனிக் கஞ்சா கடத்தி வந்து கைதானார். இதை அடுத்து இம்மாதம் 16ஆம் தேதி ரூ.7.6 கோடி மதிப்புடைய 7.6 கிலோ உயர் ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு ஆண் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார். 

14 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா

இந்நிலையில் தற்போது மூன்றாவது சம்பவமாக இந்த சென்னை பயணி ரூ.3.6 கோடி மதிப்புடைய 3.6 கிலோ உயர் ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் ஒரே மாதத்தில், மூன்று சம்பவங்களில் ரூ. 14 கோடி மதிப்புடைய 14 கிலோ உயர்ரக பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, ஒரு பெண் உட்பட 3 கடத்தல் குருவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Toll Pass: அடிக்கடி சுங்கச்சாவடிய கிராஸ் பண்றவங்களா நீங்க.? உங்க காச சேமிக்க சூப்பர் திட்டம் வருது...
அடிக்கடி சுங்கச்சாவடிய கிராஸ் பண்றவங்களா நீங்க.? உங்க காச சேமிக்க சூப்பர் திட்டம் வருது...
”மேற்கு வங்க பெண்ணை சென்னையில் கடத்தி துன்புறுத்தல்” இருவரை கைது செய்தது காவல்துறை..!
”மேற்கு வங்க பெண்ணை சென்னையில் கடத்தி துன்புறுத்தல்” இருவரை கைது செய்தது காவல்துறை..!
Tamil Nadu NH Projects: தமிழ்நாட்டில் இனி பறக்கலாம்.. 963 கிமீ தூரத்திற்கு புதிய நான்கு வழிச் சாலைகள்,  மொத்தம் 6,805 கிமீ
Tamil Nadu NH Projects: தமிழ்நாட்டில் இனி பறக்கலாம்.. 963 கிமீ தூரத்திற்கு புதிய நான்கு வழிச் சாலைகள், மொத்தம் 6,805 கிமீ
இதுதான் உலகின் மிக விலையுயர்ந்த ஷாப்பிங் தெரு! சராசரி பில்லே ரூ.2 லட்சம்! எங்கு தெரியுமா?
இதுதான் உலகின் மிக விலையுயர்ந்த ஷாப்பிங் தெரு! சராசரி பில்லே ரூ.2 லட்சம்! எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Issue : 60 லட்சம் மோசடி!தவெக நிர்வாகி மீது புகார்தலைவலியில் விஜய்TVK Issue : ’’பணம்..ஜாதிக்கு தான் பதவிபுஸ்ஸி ஆனந்த் நல்லவன் இல்ல’’தவெக நிர்வாகி பகீர் வீடியோDMK Election Plan : கோவையில் சத்யராஜின் மகள்!செ. பாலாஜி ஸ்கெட்ச்..SP வேலுமணிக்கு செக்Delhi Election Exit Poll | அரியணை ஏறும் பாஜக? ஷாக்கில் AAP, காங்கிரஸ் ! வெளியான EXIT POLL | BJP

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Toll Pass: அடிக்கடி சுங்கச்சாவடிய கிராஸ் பண்றவங்களா நீங்க.? உங்க காச சேமிக்க சூப்பர் திட்டம் வருது...
அடிக்கடி சுங்கச்சாவடிய கிராஸ் பண்றவங்களா நீங்க.? உங்க காச சேமிக்க சூப்பர் திட்டம் வருது...
”மேற்கு வங்க பெண்ணை சென்னையில் கடத்தி துன்புறுத்தல்” இருவரை கைது செய்தது காவல்துறை..!
”மேற்கு வங்க பெண்ணை சென்னையில் கடத்தி துன்புறுத்தல்” இருவரை கைது செய்தது காவல்துறை..!
Tamil Nadu NH Projects: தமிழ்நாட்டில் இனி பறக்கலாம்.. 963 கிமீ தூரத்திற்கு புதிய நான்கு வழிச் சாலைகள்,  மொத்தம் 6,805 கிமீ
Tamil Nadu NH Projects: தமிழ்நாட்டில் இனி பறக்கலாம்.. 963 கிமீ தூரத்திற்கு புதிய நான்கு வழிச் சாலைகள், மொத்தம் 6,805 கிமீ
இதுதான் உலகின் மிக விலையுயர்ந்த ஷாப்பிங் தெரு! சராசரி பில்லே ரூ.2 லட்சம்! எங்கு தெரியுமா?
இதுதான் உலகின் மிக விலையுயர்ந்த ஷாப்பிங் தெரு! சராசரி பில்லே ரூ.2 லட்சம்! எங்கு தெரியுமா?
அடி மேல் அடி வாங்கும் ஆஸி அணி!  ஓய்வை அறிவித்த முக்கிய வீரர்
அடி மேல் அடி வாங்கும் ஆஸி அணி! ஓய்வை அறிவித்த முக்கிய வீரர்
வங்கி காசோலையில் பெண் செய்த காரியம்! ஷாக்கான கேஷியர்! அப்படி என்ன எழுதினார் தெரியுமா?
வங்கி காசோலையில் பெண் செய்த காரியம்! ஷாக்கான கேஷியர்! அப்படி என்ன எழுதினார் தெரியுமா?
Vidamuyarchi Review : அதே பில்டப் அதே ஏமாற்றம்..தொடரும் தமிழ் சினிமாவின் சாபம்...விடாமுயற்சி பட  விமர்சனம்
Vidamuyarchi Review : அதே பில்டப் அதே ஏமாற்றம்..தொடரும் தமிழ் சினிமாவின் சாபம்...விடாமுயற்சி பட விமர்சனம்
Pat Cummins : காயத்தில் சிக்கிய கம்மின்ஸ்.. கப்பு போச்சா? சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பே ஆடிபோன ஆஸி..
Pat Cummins : காயத்தில் சிக்கிய கம்மின்ஸ்.. கப்பு போச்சா? சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பே ஆடிபோன ஆஸி..
Embed widget