மேலும் அறிய
Keerthy Suresh: ஹிந்திக்கு போனதும் கூடிய மவுசு! 'பேபி ஜான்' படத்திற்கு மளமளவென சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்!
Keerthy Suresh Salary: கீர்த்தி சுரேஷூக்கு கல்யாண ராசி நன்றாகவே ஒர்க் அவுட்டாகிறது. பேபி ஜான் படத்துக்கு அவர் இதுவரையில் வாங்கிய சம்பளத்தை விட அதிகமாம்.

கீர்த்தி சுரேஷ் பேபி ஜான் திரைப்படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது
1/9

கீர்த்தி சுரேஷ் தன்னுடைய 15 ஆண்டுகால, பள்ளி பருவ காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். சில நடிகைகள் 40 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நிலையில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய 32 ஆவது வயதிலேயே பிரபல தொழிலதிபரான காதலரை டிசம்பர் 12 ஆம் தேதி, திருமணம் செய்து கொண்டார்.
2/9

கீர்த்தி சுரேஷ், பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதிலிருந்து கேரளாவைச் சேர்ந்த ஆண்டனி தட்டிலுடன் நல்ல நட்பில் இருந்துள்ளார். கல்லூரியில் படிக்கும் போது தான் இருவரும் காதலர்களாக மாறியுள்ளனர்.
3/9

கீர்த்தி சுரேஷ் மிகவும் கலகலப்பான துரு துரு பெண் என்றாலும், ஆண்டனி தட்டில் அப்படியே கீர்த்தி சுரேஷுக்கு நேர் எதிர். மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவர். யாரிடமும் அதிகம் பேச கூட மாட்டாராம். ஒருவேளை தனக்கு எதிர்மாறாக இவர் இருப்பது தான், கீர்த்தி சுரேஷை கவர்ந்து விட்டது போல.
4/9

இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், ஆரம்பத்தில் வீட்டில் சில எதிர்ப்புகளை இருவருமே சந்தித்தாலும், ஒருவழியாக சம்மதம் பெற்று இருவரும் திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.
5/9

பிரமாண்டமாக நடந்த கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் திருமண நிகழ்ச்சியில், நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ, நடிகர் நானி, நடிகை திரிஷா, கல்யாணி பிரியதர்ஷன், விஜய் டிவி டிடி, என்று ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
6/9

இது ஒருபுறம் இருக்க, தற்போது கீர்த்தி சுரேஷ் நடித்து டிசம்பர் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள, பேபி ஜான் படத்தின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
7/9

இயக்குநர் கலீஸ் இயக்கத்தில், வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கப்பி, ஜாக்கி ஷெராஃப், சஞ்சய் மல்கோத்ரா, ராஜ்பால் யாதவ், ஷா ரா, சல்மான் கான் (சிறப்பு தோற்றம்) ஆகியோர் நடித்துள்ளனர்.
8/9

தெறி படத்தின் இந்தி ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், சமந்தா ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் தான் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கீர்த்தி சுரேஷ் தாலியுடன் கலந்து கொண்டு வருகிறார். இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகியது.
9/9

மேலும் இதுவரை கீர்த்தி சுரேஷ் தமிழில் 3 கோடி மட்டுமே அதிக பச்சமாக சம்பளம் பெற்ற நிலையில், ஹிந்தியில் நடித்துள்ள 'பேபி ஜான்' படத்திற்கு, 4 முதல் 6 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ரூ.85 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் வரும் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 19 Dec 2024 11:04 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2025
இந்தியா
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement