CUET UG 2025: மாணவர்களே.. இன்றே கடைசி- க்யூட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? வழிகாட்டல் இதோ!
CUET UG Registration 2025: க்யூட் தேர்வுக்கு மாணவர்கள் மார்ச் 1ஆம் தேதி முதல் விண்ணப்பித்து வரும் நிலையில், விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 22) கடைசித் தேதி ஆகும்.

மத்திய அரசுப் பல்கலைக்கழகங்களிலும் தனியார் பல்கலைக்கழகங்களிலும் கலை, அறிவியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும்.
அது என்ன க்யூட் தேர்வு?
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள், க்யூட் தேர்வை அனுமதித்த மாநில அரசின் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை கலை, அறிவியல் படிப்புகளில் சேர பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET-UG 2025) நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு க்யூட் தேர்வு என்று அழைக்கப்படுகிறது.
2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் இந்தத் தேர்வு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டது. என்.சி.இ.ஆர்.டி. 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் தேசியத் தேர்வுகள் முகமை இந்தத் தேர்வை நடத்துகிறது
தேர்வுக்கு மாணவர்கள் மார்ச் 1ஆம் தேதி முதல் விண்ணப்பித்து வரும் நிலையில், விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 22) கடைசித் தேதி ஆகும். இதுகுறித்த நினைவூட்டலை தேசியத் தேர்வுகள் முகமை நேற்று வெளியிட்டதன் மூலம், இனி விண்ணப்ப அவகாசம் நீட்டிக்கப்படாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்கள் கிரெடிட்/ டெபிட் கார்டு, நெட் பேங்க்கிங் அல்லது UPI மூலம் நாளை (மார்ச் 23ஆம் தேதி) நள்ளிரவு 11.50 மணி வரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். மார்ச் 24 முதல் 26ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய முடியும்.
தேர்வு எப்போது?
2025ஆம் ஆண்டுக்கான க்யூட் தேர்வு மே 8 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு மையம் மற்றும் ஹால் டிக்கெட் உள்ளிட்ட விவரங்கள் எப்போது வெளியாகும் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.
விண்ணப்பிப்பது எப்படி?
- தேர்வர்கள் https://cuet.nta.nic.in/ - என்ற இணையதள லிங்கை க்ளிக் செய்யவும்.
- “Register” என்பதை க்ளிக் செய்யவும்.
- CUET UG Login Id ஐ உருவாக்கவும்.
- பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட சுயவிவர குறிப்புகளுடன் உயர்கல்வி படிப்பு பற்றிய விவரங்ககள், புகைப்படங்கள் ஆகியவற்றை பதிவு செய்யவும்.
- என்.டி.ஏ. கொடுக்கப்பட்ட அளவுகளில் சான்றிதழ் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- விண்ணப்ப கட்டணம் செலுத்தினால் விண்ணப்ப பதிவு முடிந்துவிடும்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய https://cdnbbsr.s3waas.gov.in/s3d1a21da7bca4abff8b0b61b87597de73/uploads/2025/03/2025030146.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
தொடர்புக்கு: 011-40759000, cuet-ug@nta.ac.in
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

