மேலும் அறிய
Radhika Apte: நெட் மட்டும் தான் உடையா? நிறைமாத வயிற்றுடன் Pregnancy போட்டோ ஷூட்டில் அத்து மீறிய ராதிகா ஆப்தே!
நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் தனக்கு பெண் குழந்தை பிறந்ததாக அறிவித்த நிலையில், குழந்தை பெற்றெடுப்பதற்கு முன், நடத்திய போல்டு போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ராதிகா ஆப்தேவின் கர்ப்பகால புகைப்படங்கள்
1/8

பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே, ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். குறிப்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்து - இயக்கி இருந்த 'தோனி' திரைப்படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
2/8

இந்த படத்தின் மூலம், அதிகம் கவனிக்கப்பட்ட நடிகையாக மாறிய ராதிகா ஆப்தே, இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்திக்கு ஜோடியாக 'ஆல் இன் ஆல் அழகு' ராஜா படத்தில் 20 நிமிடம் மட்டுமே தலைகாட்டினார்.
3/8

இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்த 'கபாலி' படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ராதிகா ஆப்தேவுக்கு கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்த போதிலும், அடுத்தடுத்து பாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வந்ததால் தேடி சென்ற தமிழ் பட வாய்ப்புகளையும் மறுத்தார்.
4/8

தமிழில் இழுத்து மூடிக்கொண்டு, குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் இவர் நடித்தாலும், இந்தியில் மிகவும் கவர்ச்சியான வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் தனக்கு திருமணம் ஆன தகவலை கூட, பல வருடங்களுக்கு பின்னரே வெளியே கூறினார்.
5/8

அதன்படி, ராதிகா ஆப்தே கடந்த 2012-ஆம் ஆண்டு பெனெடிக்ட் டெயிலர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். லண்டனை சேர்ந்த இவரால் அடிக்கடி, இந்தியாவுக்கு வர முடியாது என்பதால் ராதிகா ஆப்தே தான், தன்னுடைய கணவரை லண்டனுக்கு சென்று சந்திப்பதாகவும், இதனால் பிளைட் டிக்கெட் விலை தான் என் வாழ்க்கையில் அதிகமாக ஆகிறது என ஒரு முறை ஓப்பனாக பேசி இருந்தார்.
6/8

திருமணம் ஆகி 12 வருடங்களுக்கு பின்னர் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை சில மாதங்களுக்கு முன் அறிவித்த ராதிகா ஆப்தே, டிசம்பர் 14-ஆம் தேதி தனக்கு பெண் குழந்தை பிறந்த தகவலை அறிவித்தார்.
7/8

மேலும் லாப் டாப் முன்பு அமர்ந்துகொண்டு, தன்னுடைய குழந்தைக்கு பாலூட்டியபடி எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டார். இதை தொடர்ந்து ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை நடிகை ராதிகா ஆப்தேவுக்கு தெரிவித்து வந்தனர்.
8/8

குழந்தை பிறந்த பின்னர் ராதிகா ஆப்தே... நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது எடுத்து கொண்ட, மிகவும் போல்ட்டான போட்டோ ஷூட் சிலவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Published at : 18 Dec 2024 09:53 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
பொழுதுபோக்கு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion