‘என்ன மனுஷன் யா நீ’.....மயிலாடுதுறை பொதுமக்களை நெகிழ வைத்த வாகன ஓட்டி..!
பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் மீது கவனக்குறைவாக மழைநீரை இரைத்துவிட்டு சென்ற வாகனஓட்டி வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கிச்சென்று கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டதால் பயணிகள் நெகிழ்ச்சியடைந்தனர்.
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. 5 ம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், நேற்று முன்தினம் முழுவதும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. நேற்று காலை முதல் மாலை வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையானது இல்லாமல் இருந்தது. மீண்டும் மாலை 4 மணிமுதல் இரவு 8 மணி வரை மாவட்டத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்நிலையில், செம்பனார்கோயில் அடுத்த காளகஸ்திநாதபுரம் என்ற இடத்தில் மழைக்காகவும், பேருந்து ஏறுவதற்காகவும் பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள் காத்திருந்தனர். அப்போது, அவ்வழியே வேகமாக சென்ற சொகுசு கார் ஒன்று பயணிகள் மீது சேறுடன் கலந்த மழைநீரை வாரி இறைத்து விட்டு தாண்டிச்சென்றது. இதனால் ஆடைகளில் தண்ணீர் பட்டு நனைந்து விட்டதால் அங்கு நின்ற பயணிகள் ஆத்திரமடைந்து கார் டிரைவரை திட்டியுள்ளனர்.
இதனை ரியர்வியூ மிரர்ரில் கண்ணாடிகள் வழியாக கவனித்த வாகன ஓட்டி உடனடியாக காரை நிறுத்திவிட்டு, மழையில் இறங்கி வந்து அங்கு நின்றிருந்த பயணிகளிடம் கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பு கோரினார். கார் வேகமாக செல்லும் போது மழைநீர் இறைப்பது சாதாரண விஷயம்தான் என்றாலும், அதற்காக காரை நிறுத்தவிட்டு வந்த கார் ஓட்டுநரை அங்கு நின்றிருந்த அனைவரும் பரவாயில்லை, போயிட்டுவாங்க என்று அவர் செயலை மன்னித்து சொல்லி அனுப்பி வைத்து, கார் ஓட்டுநரின் செயலை எண்ணி நெகிழ்ச்சி அடைந்தனர். இந்த காட்சி அங்குள்ள கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சிகள், ‘என்ன மனுஷன் யா நீ’ என பதிவிட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இனி ரம்யா பாண்டியன் வழி தான்...’ இடுப்பு போட்டோக்களுடன் களமிறங்கிய சாக்ஷி!
மாணவ, மாணவியர்களுக்கு விலை இல்லாத இலவச மிதிவண்டிகளை வழங்கிய பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஸ்ரீகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 -ஆம் வகுப்பு பயிலும் 104 மாணவர்கள், 114 மாணவிகள் என 218 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா இலவச மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முகமது இக்பால் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டிகளை நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா.முருகன் கலந்து கொண்டு பள்ளியின் மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், ஒன்றிய செயலாளர் ஏ.ஆர்.ராஜா, மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா ராஜ்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.