மேலும் அறிய
நண்பனை வாக்கி டாக்கி ரெக்கார்டர் மூலம் FRANK.. விளையாட்டு கொலையில் முடிந்தது எப்படி !
மதுரையில் போலீஸ் போல பேசி தனது நண்பனிடம் FRANK செய்த சம்பவத்தால் ஏற்பட்ட பிரச்னையில், இளைஞர் பரிதாபமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த அரசு
Source : whats app
”உங்க பையன ஒழுங்கா இருக்க சொல்லுங்க... ரொம்ப சேட்ட பண்ணுறான்”. - என போலீஸ் வாக்கிடாக்கி ரெக்கார்டை பயன்படுத்தி FRANK செய்த நண்பன் கொலையில் முடிந்த பரிதாபம். - அப்பாவி இளைஞர் உயிரிழப்பு.
உயிர்போகும் சூழலில் தாய், சகோதரியை காப்பாற்றிய இளைஞர்
மதுரை மாவட்டம் சிலைமான் காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட கல்மேடு அஞ்சுகம் நகர் பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் அரசு(18). இந்த இளைஞர் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது பள்ளி நண்பரான அழகுபாண்டியுடன் நட்புடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அரசு வீட்டில் இருந்தபோது போன் செய்து பின்னால் காவல்துறையினரின் வாக்கிடாக்கி சவுண்ட் இருப்பது போன்று மிமிக்ரி செய்து போலீஸ் போல பேசி அரசிடமும் அவரது தாயிடமும் பேசியுள்ளனர்.
இரு குடும்பத்திற்கும் வாக்குவாதம்
அப்போது உங்க பையன ஒழுங்கா இருக்க சொல்லுங்க உங்க பையன் ரொம்ப சேட்ட பண்றான் கவனமா இருக்க சொல்லுங்க என பேசியுள்ளனர். இதனை கேட்டு அரசும் அவரது குடும்பத்தினரும் பயத்தில் இருந்துள்ளனர். பின்னர் சில நாட்கள் கழித்து வாக்கிடாக்கி சத்தத்துடன் போலீஸ் போல பேசியது அரசின் நண்பன் அழகுபாண்டி FRANK செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இரு குடும்பத்தினரும் பேசி சமாதானப்படுத்தியுள்ளனர்.
அரசு தாயையும், தங்கையையும் காப்பாற்றியுள்ளார்.
இதனால் அழகுபாண்டியும் , அரசும் பேசிக்கொள்ளாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அழகுபாண்டியின் அண்ணன் செல்லப் பாண்டியை அரசு முறைத்து பார்த்துள்ளார். இதனால் தனது தம்பி அழகுபாண்டியை அரசு தாக்கி விடுவாரோ என நினைத்து செல்லப்பாண்டி நேற்று நள்ளிரவு அரசின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீடு கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில் கதவை எட்டி உதைத்துள்ளார். அப்போது அரசின் தாயார் கதவை திறந்தபோது கத்தியுடன் வந்த செல்லபாண்டி வீட்டிற்குள் இருந்த அரசுவின் கழுத்தில் குத்தியுள்ளார். அப்போது அரசுவின் தாயாரும், தங்கச்சியும் கூச்சலிட்டபடி செல்லபாண்டியை தடுக்க முயன்றபோது, அவர்களையும் தாக்க முயன்றதால் அரசு இருவரையும் காப்பாற்றியுள்ளார்.
கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது மீண்டும் செல்லப்பாண்டி கத்தியால் குத்திவிட்டு வாசலில் இறங்கி தப்பியோடிய போது, அவரை துரத்திபிடிப்பதற்காக ஓடிய அரசு அங்கயே மயங்கிவிழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சிலைமான் காவல்துறையினர் அரசுவின் உடலை கைப்பற்றி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சிலைமான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அரசுவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய அழகு பாண்டியின் அண்ணனான செல்ல பாண்டியை தேடி வருகின்றனர். மதுரையில் போலீஸ் போல பேசி தனது நண்பனிடம் FRANK செய்த சம்பவத்தால் ஏற்பட்ட பிரச்னையில் இளைஞர் பரிதாபமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















