Google's New Gmail Tool: அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
கூகுள் மெயில் பயன்படுத்துபவர்கள் இனிமேல் தேவையில்லாத மெயில்களை நீக்க சிரமப்பட வேண்டியதில்லை. ஆம், ஜிமெயிலில் புதிய டூட் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் விவரங்களை காணலாம்.

கூகுளின் ஜி மெயிலை பயன்படுத்துபவர்களி சிரமங்களை குறைக்கும் வகையில், அதில் ஒரு புதிய டூலை அறிமுகம் செய்துள்ளது கூகுள். அதன்படி, இனிமேல் தேவையில்லாத விளம்பர இ மெயில்களை சுலபமாக அகற்றிவிடலாம். அது குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.
உலகம் முழுவதும் அதிக பயனாளர்களை கொண்டுள்ள ஜி மெயில்
உலகம் முழுவதிலும் இ மெயிலை பயன்படுத்தாகவர்களே இருக்க முடியாது என கூறலாம். அந்த அளவிற்கு இ மெயில் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பல்வேறு மென்பொருள் நிறுவனங்கள் இ மெயில் சேவையை வழங்கினாலும், அதில் கூகுளின் ஜி மெயில் மிகவும் பிரபலமானதாகவும், அதிக பயனாளர்களையும் கொண்டுள்ளதோடு, முதலிடத்திலும் உள்ளது.
உலகம் முழுக்க சுமார் 180 கோடி ஜி மெயில் கணக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதன் பயனாளர்களை கவர, அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை கூகுள் வெளியிட்டு வருகிறது. அப்படி, தேவையில்லாத இ மெயில்களை சுலபமாக நீக்கும் வகையில் ஒரு புதிய அப்டேட்டை தான் தற்போது கூகுள் வழங்கியுள்ளது.
புதிய டூல்(அப்டேட்) மூலம் என்ன செய்யலாம்.?
தற்போது ஜி மெயிலில் புதிய டூல் ஒன்றை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம், மெயில் இன்பாக்ஸில் குவியும் நியூஸ் லெட்டர், வியாபார, விளம்பர இ மெயில்கள் போன்ற அவசியமற்ற மெயில்களை, மேனேஜ் சப்ஸ்கிரிப்ஷன் என்ற புதிய டேப்-ன்(TAB) கீழ் கொண்டுவர கூகுள் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம், நியூஸ் லெட்டர்ஸ், டீல்ஸ், வியாபாரம், விளம்பரம் தொடர்பான இ மெயில்களை எளிதில் கண்டறிந்து, வகைப்படுத்தி நீக்க முடியும் என கூகுள் தெரிவித்துள்ளது. இதனால், இன்பாக்ஸில் தேவையில்லாமல் குவிந்து கிடக்கும் மெயில்களை பில்ட்டர் செய்து, தேவையான மெயில்களை மட்டும் பார்த்துக் கொள்ள முடியும்.
அதோடு, புதிய டேப்-ன் கீழ் இருக்கும் தேவையில்லாத மெயில்களை மட்டும் செலெக்ட் செய்து, அவற்றை டெலிட் செய்ய முடியும். தேவையில்லாத மெயில்களால் இன்பாக்ஸ் நிறைந்து, ஸ்டோரேஜும் தீர்ந்து, முக்கியமான மெயில்களை பார்க்க முடியாமல் அவதிப்படும் பயனாளர்களுக்கு இது மிகவும் வசதியான டூலாக இருக்கும்.
இதனால், ஜி மெயில் பயன்படுத்துபவர்களுக்கு இந்த புதிய வசதி மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.




















