மேலும் அறிய
Thanjavur Big Temple : தஞ்சாவூர் பெரிய கோயிலில் மகா சிவராத்திரி விழாவை ஒட்டி குவிந்த பொதுமக்கள்!
Thanjavur Big Temple : பிரதோஷத்தை ஒட்டி நந்தியம் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைப்பெற்றது.

தஞ்சை பெரிய கோயிலில் பிரதோஷ வழிபாடு
1/6

தமிழ்நாட்டில் உள்ள மிகவும் முக்கியமான சிவ ஸ்தலமாக தஞ்சை பெரிய கோயில் விளங்குகிறது. பெரிய கோபுரம், பெரிய லிங்கம், பெரிய நந்தி என மிகவும் பிரம்மாண்டமாக காணப்படும் இக்கோவில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
2/6

1000 ஆண்டுகளை தாண்டியும், தஞ்சாவூர் மண்ணில் கம்பீரமாக நிற்கும் இந்த கோயில் அந்த ஊரின் அடையாளமாகவே இருக்கிறது.
3/6

ஆன்மிக ஸ்தலமாகவும் சுற்றுலா ஸ்தலமாகவும் விளங்கும் இந்த இடத்தில் தினந்தோறும் மக்கள் கூட்டம் குவியும்
4/6

ஒவ்வொரு மாதமும் வரும் பிரதோஷம், சிவராத்திரி நாட்களில் இக்கோயில் விசேஷமாக காணப்படும்.
5/6

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டின் மகாசிவராத்திரி நேற்று (மார்ச் 8) கொண்டாடப்பட்டது. ஒரே நாளில் சிவராத்திரியும் மாத பிரதோஷமும் வந்ததால் தஞ்சை கோயிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது.
6/6

பிரதோஷத்தை ஒட்டி நந்தியம் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. பால் அபிஷேகம், மஞ்சள் அபிஷேகம் உள்ளிட்டவை செய்யப்பட்டது.
Published at : 09 Mar 2024 08:53 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion