‛இனி ரம்யா பாண்டியன் வழி தான்...’ இடுப்பு போட்டோக்களுடன் களமிறங்கிய சாக்ஷி!
ரம்யா பாண்டியன் வழியில், தானும் இடுப்பு போட்டோக்களை வெளியிட்டு, பரபரப்பாக பேச வைக்கலாம் என்று நினைத்த சாக்ஷி, அதற்கான போட்டோ ஷூட் நடத்தி, புடவை அணிந்து போட்டோக்கள் எடுத்துள்ளார்.
சின்னத்திரை, வெள்ளித்திரை என பிஸியாக இருந்தவர் சாக்ஷி அவர்வால். ரஜினியுடன் காலாவில் நடிக்கும் அளவிற்கு, அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகளை பெற்றவர். விஜய் டிவியில் புகழ் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, கொஞ்சம் ஆதரவாளர்களையும், அதே அளவிற்கு ஹெட்டர்ஸையும் சம்பாதித்தவர்.
பிக்பாஸ் சென்றதற்கு பின்னால், சாக்ஷியின் சினிமா வாய்ப்புகள் குறைந்ததாக கூறப்படுகிறது. வெள்ளத்திரையில் இருந்து சீரியலில் கெஸ்ட் ரோல் நடிக்கும் அளவிற்கு மார்க்கெட் சரிந்தது. விதவிதமான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தும், பெரிய அளவில் அதனால் பலனில்லை. இந்நிலையில் தான் சாக்ஷி புதிய அஸ்திரம் ஒன்றை கையில் எடுத்துள்ளார்.
View this post on Instagram
சில ஆண்டுகளுக்கு முன், ரம்யா பாண்டியன் வெளியிட்ட இடுப்பு போட்டோ ஒன்று, பெரிய அளவில் வைரல் ஆனது. அவருக்கு வாய்ப்புகளையும் அள்ளிக் குவித்தது. அவரும், பிந்நாளில் அந்த பிரபலத்தை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து சென்றதும், நமக்கு தெரியும்.
View this post on Instagram
ரம்யா பாண்டியன் வழியில், தானும் இடுப்பு போட்டோக்களை வெளியிட்டு, பரபரப்பாக பேச வைக்கலாம் என்று நினைத்த சாக்ஷி, அதற்கான போட்டோ ஷூட் நடத்தி, புடவை அணிந்து போட்டோக்கள் எடுத்துள்ளார். முன்பு ரம்யா பாண்டியன் எது மாதிரியான போட்டோக்களை வெளியிட்டாரோ, அதே மாதிரியான போட்டோக்களை சாக்ஷியும் பதிவிட்டு, ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இழந்த தனது சினிமா வாய்ப்புகளுக்கு இது போன்ற புகைப்படங்கள் பெரிய அளவில் உதவும் என அவர் எதிர்பார்த்துள்ளார் என தெரிகிறது.