மேலும் அறிய

குடும்பத்துடன் முற்றுகையா? வாக்குறுதி என்னாச்சு? அண்ணாமலை பல்கலை. ஊழிர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை! 

தினக்கூலி தொழிலாளர்களை குடும்பத்துடன் போராடும் நிலைக்கு தமிழக அரசு தள்ளியிருப்பது கண்டிக்கத்தக்கது- அன்புமணி.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தற்காலிக பணியாளர்களை உடனடியாக பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

குடும்பத்தினருடன் முற்றுகைப் போராட்டம்

’’சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் என்.எம்.ஆர் (Nominal Muster Roll) பணியாளர்கள் 133 பேரும், தினக்கூலி பணியாளர்கள் 107 பேரும் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நாளை ஜூலை 11-ஆம் நாள் பல்கலைக்கழக வளாகத்தில் குடும்பத்தினருடன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.  தினக்கூலி தொழிலாளர்களை குடும்பத்துடன் போராடும் நிலைக்கு தமிழக அரசு தள்ளியிருப்பது கண்டிக்கத்தக்கது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் என்.எம்.ஆர் பணியாளர்களும், தினக்கூலி பணியாளர்களும் 15 முதல் 20 ஆண்டுகளாக இதே நிலையில் பணியாற்றி வருகின்றனர். தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி குறைந்தது ஆண்டுக்கு ஒரு முறை அவர்கள்  போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு போராட்டத்திலும் அவர்களுக்கு பா.ம.க. ஆதரவளித்திருக்கிறது.

பலமுறை அவர்களை பணி நீக்கம் செய்ய பல்கலைக்கழகம் முயன்ற போது சட்டப்பேரவையிலும், அதற்கு வெளியிலும் குரல் கொடுத்து பணி நீக்கத்தைப் பா.ம.க. தடுத்து நிறுத்தியிருக்கிறது. தங்களின் வாழ்வாதாரத்தைக் காக்க இப்போது அவர்கள் நடத்தும் போராட்டத்தையும் பா.ம.க. முழுமையாக ஆதரிக்கிறது.

திமுக அரசு மறுப்பது சமூக அநீதி

அண்ணாமலை பல்கலைக்கழக தினக்கூலி பணியாளர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. அவற்றை நிறைவேற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை.  அவர்கள் அனைவரும், அவர்கள் செய்யும் பணிக்கு ஏற்ற கல்வித் தகுதியை பெற்றவர்கள் ஆவர். இவர்களின் நியமனம் முழுவதும் விதிகளின்படியும், பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு ஒப்புதலுடனும் தான் செய்யப்பட்டுள்ளது. பணி நிலைப்பு செய்வதற்கான தகுதியும், திறமையும் கொண்ட தினக்கூலி பணியாளர்களை  பணி நிலைப்பு செய்ய திமுக அரசு மறுப்பது சமூக அநீதி ஆகும்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது.  ஆனால், நான்கரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை ஒரே ஒரு தற்காலிக பணியாளர் கூட பணிநிலைப்பு செய்யப்படவில்லை. அப்பாவி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துடன் தமிழக அரசு விளையாடுவது நியாயமல்ல. 

இனியும் தாமதிக்காமல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் என்.எம்.ஆர் பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள் 240 பேரையும் பணி நிலைப்பு செய்ய வேண்டும்; அதன் மூலம் அவர்களின் போராட்டத்தை தடுக்க வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
நீட் வினாத்தாள் கசிவு; ஒட்டுமொத்த தேசமும் பொறுப்பேற்க வேண்டும்- பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு
நீட் வினாத்தாள் கசிவு; ஒட்டுமொத்த தேசமும் பொறுப்பேற்க வேண்டும்- பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு
கலைஞர் பற்றிய பாடங்கள் நீக்க வாய்ப்பு? தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டக் குழு ஆலோசனை
கலைஞர் பற்றிய பாடங்கள் நீக்க வாய்ப்பு? தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டக் குழு ஆலோசனை
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Singer Arivu arrest : தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Letter to MKS : ‘மு.க.ஸ்டாலின் இருட்டில் வைக்கப்பட்டார் – அதிமுக ஆட்சி மாதிரிதான் திமுகவும்’ ராஜினாமா செய்த நிர்வாகி பரபரப்பு கடிதம்..!
'அதிமுக ஆட்சி மாதிரிதான் திமுகவும்’ ராஜினாமா செய்த நிர்வாகி பரபரப்பு கடிதம்..!
Parandur Airport : ’பரந்தூர் விமான நிலைய இடம்’ திமுக எழுப்பிய கேள்வியால் வெளியான உண்மை..!
’பரந்தூர் விமான நிலைய இடம் மாற்றமா?’ மத்திய அரசு அதிரடி பதில்..!
மைலேஜை அள்ளித்தரும் டாப் 6 ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன? விலை எப்படி?
மைலேஜை அள்ளித்தரும் டாப் 6 ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன? விலை எப்படி?
Flying Electric Taxi: இனி பறந்துட்டே பயணிக்கலாம்; நாட்டின் முதல் EV டாக்சி, ஐஐடி சென்னை, அடுத்த ஆண்டில் அமல்- விவரம்
Flying Electric Taxi: இனி பறந்துட்டே பயணிக்கலாம்; நாட்டின் முதல் EV டாக்சி, ஐஐடி சென்னை, அடுத்த ஆண்டில் அமல்- விவரம்
டேங்கை நிரப்பினா 368 கி.மீட்டர் வரை மைலேஜ்.. சிட்டியில் மாஸ் காட்ட VLF Mobster ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
டேங்கை நிரப்பினா 368 கி.மீட்டர் வரை மைலேஜ்.. சிட்டியில் மாஸ் காட்ட VLF Mobster ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
DMK MLA: ரூல்ஸ் பேசிய திமுக எம்.எல்.ஏ.. ”அப்டிலாம் ஒன்னும் இல்லையே” விதிகளை அடுக்கிய சபாநாயகர்
ரூல்ஸ் பேசிய திமுக எம்.எல்.ஏ.. ”அப்டிலாம் ஒன்னும் இல்லையே” விதிகளை அடுக்கிய சபாநாயகர்
Embed widget