”பொன்முடிக்கு போர்க்கொடி? – மேடையிலேயே வாக்குவாதம்” Ex.MLA செய்தது இதைதான்..!
நினைவேந்தல் நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜை பேச அழைப்பதற்கு பதிலாக விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா பேச அழைத்ததற்கு வாக்குவாதம் செய்தார்.

விழுப்புரம்: மறைந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தியின் சிலை திறப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி மேடையில் அமர்ந்திருக்கும் போது எப்போதும் வாய்திறக்காத முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ் தன்னை பேச அழைக்கவில்லை என மேடையிலையே கோவமாக கேட்டதால் விழா மேடையில் சலசலப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட செயலாளராக இருந்த புகழேந்தி கடந்தாண்டு மார்ச் 6ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி விழுப்புரம் அருகிலுள்ள அத்தியூர் திருவாதி கிராமத்தில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தியின் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் மறைந்த புகழேந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் இருவரும் உரையாற்றினர். இந்நிகழ்வில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
நினைவேந்தல் நிகழ்ச்சியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன்...
புகழேந்தியின் சிலையை திறக்கும் துர்பாக்கிய நிலை கிடைத்துவிட்டதாகவும் என்றும் அழாத பொன்முடி புகழேந்தி இறந்தபோது அழுதார். தேர்தலில் சுற்றி சுழன்று வேலை செய்த புகழேந்தியின் புகழ் நிலைத்து நிற்கும் என தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பொன்முடி
புகழேந்தியின் புகழை சொல்லி தெரிந்துக்கொள்ள வேண்டியதில்லை அவர் நம்மிடையே இல்லை, அவர் விட்டுச்சென்ற பணிகளை நாம் தொடர வேண்டும், விழுப்புரம் முதல்வர் வருகையின் போது மருத்துவ சிகிச்சையை பாதியிலேயே நிறுத்திவிட்டு வந்தவர் தான் புகழேந்தி. புகழேந்தி மீது முதல்வர் தனி அன்பு வைத்திருந்தார். புகழேந்தி வழியில் செயல்பட வேண்டும்எ ன பேசினார்.
நினைவேந்தல் நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜை பேச அழைப்பதற்கு பதிலாக விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா பேச அழைக்கப்பட்டார். உடனடியாக புஷ்பராஜ் என்னை ஏன் பேச அழைக்கவில்லை, நான் பேசக்கூடாதா என கேட்டு எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. அதன் பின் மேடையில் முன்னாள் எம் எல் ஏ புஷ்பராஜ் பேசினார்.

