விம்பிள்டன் வென்ற ஜானிக் சின்னருக்கு ஜனநாயகன் ஸ்டைலில் பாராட்டு..வைரலாகும் போஸ்டர்
தளபதி விஜயின் ஜனநாயகன் படத்தின் போஸ்டர் மூலம் ஜானிக் சின்னருக்கு மரியாதை செலுத்திய ஜியோஹாட்ஸ்டார், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் விம்பிள்டன்!

விம்பிள்டனில் ‘நாயகன்’ பாராட்டு
தளபதி விஜய் போஸ்டரை ஒத்த கிரியேட்டிவ் மூலம் ஜானிக் சின்னருக்கு மரியாதை செலுத்திய ஜியோஹாட்ஸ்டார், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் விம்பிள்டன்!
2025 விம்பிள்டன் போட்டியில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற இத்தாலியின் ஜானிக் சின்னர்க்கு, ஜியோஹாட்ஸ்டார், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், மற்றும் விம்பிள்டன் இணைந்து வழங்கிய பாராட்டு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள தளபதி விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தழுவிய வகையில், இந்த கிரியேட்டிவ் சின்னரின் வெற்றியை "விம்பிள்டன் நாயகன்" என்ற பெயரில் கொண்டாடுகிறது.
போஸ்டரில் சின்னர் வெள்ளை உடையில், வெற்றிக்கோப்பையுடன் செல்ஃபி எடுக்கிறார்; பின்னணியில் வெள்ளை ஆடையணிந்த உற்சாகமான ரசிகர்களின் பெரும் கூட்டம் – இதையெல்லாம் காணும் போது, ஒரு தமிழ் அரசியல் திரைப் பட பாணி என்பதை உணர முடிகிறது.
இந்த ஐடியா, இந்திய ரசிகர்களிடம் மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள தமிழ் பேசும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த கிரியேட்டிவ் ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுவால் உருவாக்கப்பட்டு, விம்பிள்டனின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முயற்சி, உலகக் களத்தில் தமிழ் கலாச்சாரத்தின் தாக்கத்தை நிரூபிக்கிறது. “மையக் கோர்ட் முதல் மண்ணின் மீதான பாசம் வரை – நம்ம நாயகன்!” என ரசிகர்கள் விமர்சனம் செய்தனர்.
விம்பிள்டன் இறுதிப் போட்டி நேரலை ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பானதை தொடர்ந்து இந்த போஸ்டர் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
ட்யூன்-இன் அறிவிப்பு:
ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-இல் தற்போது விம்பிள்டன் போட்டிகளின் ஹைலைட்ஸ், சிறப்பு காணொளிகள் மற்றும் பின்னணிக் காட்சிகளை முழுமையாக காணலாம்.





















