மேலும் அறிய
TVK Vijay: த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழா - விஜய் உரையின் ஹைலைட்ஸ்!
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளதை கொண்டாடும் வகையில் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

த.வெ.க. - விஜய்
1/5

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வரலாறு படைக்கும். 1967, 1977-ஐப் போல ஆட்சியைப் பிடிப்போம்.வரலாறு அமைப்போம் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.'அரசியல் என்றாலே வேற லெவல்தானே. யார் எங்கு எதிர்ப்பார்கள் எனத் தெரியாது. யார் யாரை ஆதரிப்பார்கள் என்று தெரியாது. அதை கணிக்கவும் முடியாது.
2/5

”நம்முடைய கட்சி ஒன்றும் பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது. முன்பெல்லாம் பண்ணையார்கள்தான் பதவியில் இருப்பார்கள். இப்போது கொஞ்சம் மாறிவிட்டது. பதவியில் இருப்பவர்கள் பண்ணையார்களாக மாறிவிட்டார்கள்''. என்றார்.
3/5

மொழி திணிப்பு பற்றி பேசிய அவர் “நாம எல்லா மொழியையும் மதிப்போம். அதுல மாற்றுக்கருத்தும் கிடையாது. தனிப்பட்ட முறையில யாரு வேண்டுமானாலும் எந்த ஸ்கூல்ல வேண்டுமானாலும் படிக்கலாம். அது அவங்க அவங்க தனிப்பட்ட உரிமை. ஆனால், கூட்டாட்சித் தத்துவத்தை மீறி மாநில மொழிக் கொள்கையை, கல்விக்கொள்கையை கேள்விக்குறியாக்கி வேறு ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணித்தால் அது அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி ப்ரோ?” என்று பேசினார்.
4/5

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில், நடிகர் விஜய்யுடன் இணைந்து தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றுள்ளார்.
5/5

, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பொய் பிரச்சாரங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு நாம் உறுதியாக எதிர்ப்போம். நம்பிக்கையுடன் இருங்கள் என தொண்டர்களுக்கு நம்பிக்கை வார்த்தையுடன் உரையை முடித்தார்.
Published at : 26 Feb 2025 02:22 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
சென்னை
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion