Ayali Serial: கபிலனை கடத்திய வர்மா.. எப்படி காப்பாற்றப்போகிறாள் அயலி? இன்றைய எபிசோடில் இதுதான்
கபிலனை வர்மா கடத்திய நிலையில், அயலி எப்படி அவரை மீட்கப்போகிறார்? என்பதை இன்றைய எபிசோடில் காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி. நேற்றைய எபிசோடில் வர்மா ஒரு திட்டத்தை கூறி, கபிலனை கவனிக்க சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அயலியிடம் ஆவேசப்பட்ட இந்திராணி:
அதாவது, வர்மாவின் ஆட்கள் கபிலனை கடத்த இந்திராணி இதெல்லாம் அயலியின் வேலையாக இருக்கும் என்று சந்தேகப்படுகிறாள். இதைத்தொடர்ந்து அயலிக்கு போன் போட்டு சத்தம் போடுகிறாள்.
அயலி போனில் பேசுவதை பார்த்த செல்லம்மா, ரித்திகா ஆகியோர் யார்கிட்ட தான் பேசுறா என சந்தேகப்படுகின்றனர். சார்ஜ் போட்ட சமயத்தில் அவளது போனை எடுத்துப் பார்க்க அதில் இந்திராணிக்கு போன் போயிருப்பதை பார்த்து இவருக்கு இந்திராணியிடம் பேசுகிறாள் என்று குழப்பம் அடைகின்றனர். அயலி ரூமுக்கு வர இவர்கள் பீரோவுக்கு பின்னாடி மறைந்து கொள்கின்றனர்.
மீட்கப்படுவாரா கபிலன்?
அடுத்து வயது சிவாவிடம் விஷயத்தை சொல்ல சிவா போன் நம்பரை வைத்து ட்ரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம் சொல்கிறான். வர்மாவின் ஆட்கள் கபிலனை ஒரு இடத்திற்கு கடத்தி வருகின்றனர். மேலும் அந்த அயலியை சும்மா விடக்கூடாது என சொல்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.




















