மேலும் அறிய

பூந்தமல்லியில் அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து நொறுங்கிய வீடு; 7 பேர் காயம்

பூந்தமல்லியில் வீட்டு உபயோக சிலிண்டர் வெடித்தது விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு.

சென்னை பூவிருந்தவல்லியில் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமையல் சிலிண்டர் கசிவு

சென்னை பூந்தமல்லி அடுத்த சக்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் குமார். இவரது குடியிருப்பு அருகே உள்ள வீட்டில் வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வாடகைக்கு எடுத்து தங்கி வருகின்றன.‌  இந்தநிலையில், இன்று மதியம் திடீரென வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர், தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. கேஸ் சிலிண்டர் தீ பற்றி எரிவதை பார்க்க வடமாநில இளைஞர்கள் வீட்டில் இருந்து வேக வேகமாக வெளியேறியுள்ளனர். 

இந்தநிலையில் வட மாநில இளைஞர்கள் கூச்சலை கேட்டு வீட்டிலிருந்து வெளிவந்த,  குமார் உள்ளிட்ட குடியிருப்பு பகுதியை சேர்ந்த சிலர் என்ன பிரச்சனை விசாரித்துக் கொண்டிருந்தபோது, திடீரென பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து சிதறி உள்ளது. சிலிண்டர் வடித்து விபத்துக்குள்ளானதில், வீட்டில் சுவர் ஒரு பகுதி முழுவதும் இடிந்து விழுந்தது. மேலும் அருகில் இருந்த வீடுகளிலும் சிலிண்டர் வடித்த காரணத்தால், விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

தீயணைப்புத் துறையினர் தீவிர விசாரணை

இந்த விபத்தில் குமார், ஜெகன், சரஸ்வதி, யுவராஜ், ஷீலா, ரிஷி மற்றும் நீலக்குமார் ஆகிய ஏழு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் விபத்தால் காயம் அடைந்த ஏழு பேரும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து உடனடியாக பூந்தமல்லி தீயணைப்பு துறை நற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போலீசார் சிலிண்டர்களை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடந்தது என்ன ?

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினரை தொடர்ந்து கொண்டு விசாரித்த போது , வட மாநில இளைஞர்கள் இங்கே தங்கி வந்திருப்பது விசாரணை தெரிய வந்துள்ளது. அவர்கள் உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களை விலைக்கு வாங்கி, சிலிண்டர் நிரப்பும் பங்குகளில் நிரப்பி பயன்படுத்தி வந்தது தெரிய வந்துள்ளது. பொதுவாக வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள் அவ்வாறு, சிலிண்டர் பங்குகளில் நிரப்பி பயன்படுத்தக் கூடாது. ஆனால் அதை மீறி வடமாநில இளைஞர்கள் பயன்படுத்தி வந்தது, விசாரணையில் தெரிய வந்ததாக தெரிவித்தனர்‌. இந்த சிலிண்டர் வெடி விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
பூந்தமல்லியில் அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து நொறுங்கிய வீடு; 7 பேர் காயம்
பூந்தமல்லியில் அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து நொறுங்கிய வீடு; 7 பேர் காயம்
Video: குழிக்குள் விழுந்த யானை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மீட்பு: குவியும் பாராட்டுகள்.!
Video: குழிக்குள் விழுந்த யானை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மீட்பு: குவியும் பாராட்டுகள்.!
விண்ணப்பித்து விட்டீர்களா? அரசு வேலைக்கு சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி!
விண்ணப்பித்து விட்டீர்களா? அரசு வேலைக்கு சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy Flight Landed : 2 மணி நேரம் போராட்டம் தரையிறங்கிய விமானம் SMART-ஆக செயல்பட்ட விமானிகள்Mohammed Siraj : DSP அவதாரம் எடுத்த சிராஜ்! கெத்து காட்டும் கிரிக்கெட் வீரர்! இனி ரவுடிகள் ஜாக்கிரதைPTR on Trichy flight landing : AR Rahman Kamala Harris : OK சொன்ன ரஹ்மான்! கமலா ஹாரிஸ்-க்கு SUPPORT! 30 நிமிட பாடல் ரெடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
பூந்தமல்லியில் அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து நொறுங்கிய வீடு; 7 பேர் காயம்
பூந்தமல்லியில் அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து நொறுங்கிய வீடு; 7 பேர் காயம்
Video: குழிக்குள் விழுந்த யானை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மீட்பு: குவியும் பாராட்டுகள்.!
Video: குழிக்குள் விழுந்த யானை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மீட்பு: குவியும் பாராட்டுகள்.!
விண்ணப்பித்து விட்டீர்களா? அரசு வேலைக்கு சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி!
விண்ணப்பித்து விட்டீர்களா? அரசு வேலைக்கு சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி!
Rohit Sharma:மீண்டும் தந்தையாகும் ரோஹித் ஷர்மா;ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகினால் யார் கேப்டன்?
Rohit Sharma:மீண்டும் தந்தையாகும் ரோஹித் ஷர்மா;ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகினால் யார் கேப்டன்?
தூதர்கள் மூலம் சிக்னல் அனுப்பிய ஈரான்.. பைடனிடம் கை விரித்த நட்பு நாடுகள்.. ஷாக்கான இஸ்ரேல்!
"இஸ்ரேலுக்கு உதவாதீங்க" தூதர்கள் மூலம் வார்னிங் கொடுத்த ஈரான்.. அமெரிக்காவிடம் கைவிரித்த நட்பு நாடுகள்
அதிநவீன ராணுவ உபகரணங்களுக்கு பூஜை செய்த ராஜ்நாத் சிங்.. ராணுவ வீரர்களுடன் தசரா கொண்டாட்டம்!
அதிநவீன ராணுவ உபகரணங்களுக்கு பூஜை செய்த ராஜ்நாத் சிங்.. ராணுவ வீரர்களுடன் தசரா கொண்டாட்டம்!
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி  குரூப் 1, 2, 4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி  குரூப் 1, 2, 4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
Embed widget