மழை கொட்டியபோதும் மனம் தளராத முதல்வர் ஸ்டாலின்: மயிலாடுதுறையில் திமுக தொண்டர்களின் உற்சாகம்!
மயிலாடுதுறை நடைபெற்ற ரோடு ஷோவின் போது மழை கொட்டிய நிலையிலும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுச் சென்றார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மற்றும் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இருநாள் சுற்றுப்பயணமாக இன்று வருகை புரிந்தார். அவரது வருகையால் மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
வரவேற்பு மற்றும் கலைஞர் சிலை திறப்பு
மயிலாடுதுறை மாவட்ட நுழைவு எல்லையான கொள்ளிடத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உள்ளிட்ட உயர் அரசு அதிகாரிகள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, சோதியகுடியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவ வெண்கலச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞர் மீதான மக்களின் அன்பையும் மரியாதையையும் பறைசாற்றும் வகையில், திரளானோர் திரண்டிருந்தனர்.

திமுக கொடியேற்று விழாவில் உணர்ச்சிமிகு தருணம்
சிலை திறப்பு விழாவைத் தொடர்ந்து, 60 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். அப்போது, கொடிக்கம்பத்தில் பொருத்தப்பட்ட தானியங்கி மோட்டார் இயங்காததால், அங்கிருந்த திமுக தொண்டர்கள் இரும்பு கொடி கம்பியை வெறும் கையால் உணர்ச்சிபொங்க இழுத்து ஏற்றி வைத்தனர். இது திமுக தொண்டர்களின் கட்சிப் பற்றையும், முதலமைச்சர் மீதான அவர்களது பற்றுதலையும் வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. இந்த நிகழ்வு கூட்டத்தினர் மத்தியில் பெரும் கரவொலியைப் பெற்றது.

துணைவியாரின் பூர்வீக இல்லத்தின் ஓய்வு
அதனைத் தொடர்ந்து மதியம் முதல்வர் அவரது துணைவியார் துர்கா ஸ்டாலின் பூர்விக இல்லத்திற்கு சென்று உணவு உண்டு ஓய்வெடுத்தார். பின்னர் மாலை 6 மணியளவில் அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் அருகில் உள்ள செம்பதனிருப்பு கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ வெங்கலச்சிலையை திறந்து வைத்து அங்கே அமைக்கபட்டிருந்த 60 அடி கொடிக்கம்பத்தில் திமுக கொடியினை ஏற்றினார்.

தொடர்ந்து அங்கிருந்தே மயிலாடுதுறை நோக்கி முதலமைச்சர் ஸ்டாலின் புறப்பட்டு சென்று மணக்குடி பகுதியில் இருந்து ரோடு ஷோவில் தனது நடை பயணத்தை தொடங்கினார். மயிலாடுதுறை நகரில் முக்கிய வீதிகளில் ரோடு ஷோவில் நடத்தினார். அங்கு வழி நெடுகிலும் மக்கள் உற்சவ வரவேற்பு அளித்தனர்.
தீடீரென கொட்டி தீர்த மழை
இந்நிலையில் மயிலாடுதுறை நகரின் மையப் பகுதியான மணிகுண்டு அருகில் முதல்வர் ரோடு ஷோவின் ஈடுபட்ட போது மழை குறுக்கிட்டது, அப்போது குடை பிடித்தவாறு தனது நடை பயணத்தை தொடர்ந்தார். அப்போது மழை அதிகரித்த போதிலும், கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கியவரே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ரோடு ஷோவை தொடர்ந்தார். மழையானது, சின்னக்கடை தெரு கிளைசிறை சாலை அருகே வந்த போது மழையானது நின்றது. கொட்டும் மழையிலும் முதல்வர் ரோடு ஷோவை தொடர்ந்து திமுக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை அளித்தது.

நாளை நடைபெறும் முக்கிய நிகழ்வுகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான நாளை, ஏவிசி கல்லூரியில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில், ஏற்கனவே முடிவடைந்த பல்வேறு திட்டப் பணிகளை அவர் தொடங்கி வைப்பார். மேலும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் உள்ளார்.























