25 லட்சம் பட்ஜெட்...சுவாரஸ்யமான கதைசொல்லல்...மாயக்கூத்து திரைப்பட விமர்சனம்
Maayakoothu Movie Review : சிறிய பட்ஜெட்டில் ஃபேண்டஸி த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் மாயக்கூத்து படத்தின் முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்

மாயக்கூத்து
ஏ ஆர் ராகவேந்திரா இயக்கி கடந்த ஜூலை 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மாயக்கூத்து. நாகராஜன் கண்ணன் , டெல்லி கணேஷ் , மு ராமசாமி , சாய் தீனா , காயத்திரி , ரேகா குமணன் , முருகன் கோவிந்தசாமி , பிரகதீஸ்வரன் , ஐஸ்வர்யா ரகுபதி ஆகிய பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ரூ 25 லட்சம் பட்ஜெட்டில் ஃபேண்டஸி த்ரில்லர் படமாக உருவாகியுள்ள மாயக்கூத்து திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மாயக்கூத்து படத்தின் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம்
மாயக்கூத்து படத்தின் கதை
எழுத்தாளரான வாசன் (நாகராஜன் கண்ணன்) தனது வாசகர்களுக்காக ஒரு தொடர்கதையை எழுதுகிறார். தனது 50 ஆவது கொலையை செய்யவிருக்கும் தாதாவாக தனபால் , தனது மகனுக்கு பள்ளி கட்டனம் செலுத்த முடியாமல் தவிக்கும் செல்வி , அவளது முதலாளி , படித்து முடித்து வேலை இல்லாமல் கஷ்டப்படும் விவசாயி மகள் என நான்கு கதாபாத்திரங்களை உருவாக்குகிறார். இந்த நான்கு கதாபாத்திரங்கள் அவரவர் வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களை எதிர்கொள்கிறார்கள் . ஒரு கட்டத்திற்கு மேன் கடுப்பாகி தங்களை படைத்த எழுத்தாளனை தேடிச் சென்று அடிக்கடி கேள்வி மேல் கேள்வியாக கேட்கிறார்கள். தான் உருவாக்கிய கதாபாத்திரங்கள் தன்னை கேள்விகேட்பதை தாங்கிக் கொள்ள முடியாத வாசன் அவர்களுக்கு எந்த வகையில் உதவி செய்ய போகிறார் என்பது மாயக்கூத்து படத்தின் கதை.
எடுத்துக் கொண்ட கதையில் எந்த வித டவர்ஷனும் இல்லாமல் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கு கதை மாயக்கூத்து . கேமியோ ரோலில் வரும் டெல்லி கணேஷ் சில காட்சிகளில் நெகிழ வைக்கிறார். படத்தில் நடித்துள்ள அத்தனை நடிகர்களும் அந்தந்த கதாபாத்திரங்களின் தன்மைகளை அனுசரித்து நடித்துள்ளார்கள். ஃபேண்டஸி த்ரில் என மிக வித்தியாசமான அதே நேரம் மிக நேர்த்தியான படமாக மாயக்கூத்து திரைப்படம் உருவாகியுள்ளது.





















