மேலும் அறிய
இப்படியெல்லாமா தங்கத்தை கடத்துவீங்க..? அதிர்ச்சி அடைந்த சென்னை விமானநிலைய சுங்க அதிகாரிகள்!
ஒரு கோடியே முப்பத்தி மூன்று லட்சம் மதிப்புள்ள 3 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
![இப்படியெல்லாமா தங்கத்தை கடத்துவீங்க..? அதிர்ச்சி அடைந்த சென்னை விமானநிலைய சுங்க அதிகாரிகள்! Chennai Air Customs seized 3 kg of gold worth ₹1.33 crore at Chennai airport இப்படியெல்லாமா தங்கத்தை கடத்துவீங்க..? அதிர்ச்சி அடைந்த சென்னை விமானநிலைய சுங்க அதிகாரிகள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/10/9ebcec8cf5289de749d6de9fee293a251668044982920109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை விமான நிலையம்,
ஓமன் நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.33 கோடி மதிப்புடைய, 3 கிலோ தங்க ஸ்பிரிங்குகள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சூட்கேஸ் ரப்பா் பீடிங்குக்குள் மறைத்து வைத்து, தங்க ஸ்பிரிங்குகளை கொண்டு வந்த சென்னை பயணிகள் இருவரை, சுங்கத்துறை கைது செய்து மேலும் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
![இப்படியெல்லாமா தங்கத்தை கடத்துவீங்க..? அதிர்ச்சி அடைந்த சென்னை விமானநிலைய சுங்க அதிகாரிகள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/10/1638818baa72d6e5f3796c28ec411dc71668044955685109_original.jpg)
ஓமன் நாட்டு தலைநகா் மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த இரண்டு ஆண் பயணிகள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.
இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அவர்கள் இருவரின் உடைமைகளை முழுமையாக சோதித்தனர். உடமைகளில் ஏதும் சிக்கவில்லை. ஆனாலும் அவர்கள் கொண்டு வந்திருந்த டிராலி டைப் சூட்கேஸ்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து இரண்டு பேருடைய சூட்கேஸ்களையும் ஆய்வு செய்தனர்.
அந்த சூட்கேஸ்களை சுற்றி, அமைக்கப்பட்டுள்ள ரப்பர் பீல்டிங்கை பிரித்துப் பார்த்தனா். அதற்குள் தங்க ஸ்ப்ரிங்குகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இரண்டு பேருடைய சூட்கேஷ்களிலும் இருந்து மொத்தம் மூன்று கிலோ தங்க ஸ்ப்ரிங்குகளை சுங்க அதிகாரிகள் கண்டுப்பிடித்து எடுத்தனா். அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 1.33 கோடி.
இதை அடுத்து சுங்க அதிகாரிகள் சென்னை பயணிகள் இருவரையும் கைது செய்தனர். அதோடு தங்க ஸ்ப்ரிங்குகளையும் பறிமுதல் செய்தனர். இதை அடுத்து இரண்டு பயணிகளிடமும் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இந்த தங்க ஸ்ப்ரிங்குகளை யாருக்காக கடத்தி வருகின்றனர். இவர்களை கடத்தலுக்கு அனுப்பியவா்கள் யார்? இவர்களுக்கும் சர்வதேச கடத்தல் தங்கும் கடத்தும் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
![இப்படியெல்லாமா தங்கத்தை கடத்துவீங்க..? அதிர்ச்சி அடைந்த சென்னை விமானநிலைய சுங்க அதிகாரிகள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/10/9ebcec8cf5289de749d6de9fee293a251668044982920109_original.jpg)
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இதை போல் சூட்கேஸ் ரப்பர் பீல்டிங்கில் மறைத்து வைத்திருந்த தங்க ஸ்ப்ரிங்களையும் கைப்பற்றி, ஒருவரையும் கைது செய்தனர். தற்போது புது விதமாக, தங்கத்தை ஸ்ப்ரிங்குகளாக கடத்துவதில்,கடத்தல் ஆசாமிகள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion