Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!
Pugaar Petti: உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?
உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன செய்து மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா? ஆன்லைன் வெளியில் நடக்கும் மோசடிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதா?
கவலையே வேண்டாம்.
சமுதாயத்தின் தேவைகளையும் பிரச்சனைகளையும் தீர்க்கக் காத்திருக்கிறது புகார் பெட்டி. ABP NADU தொடங்கியுள்ள புகார் பெட்டி, அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாகச் செயல்பட உள்ளது. மக்கள் தங்களைச் சுற்றிலும் நடக்கும் முறைகேடுகளை, நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத குறைகளை புகார் பெட்டி மூலம் தீர்க்கலாம்.
சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நம்முடைய பங்கு சிறிதேனும் இருக்க வேண்டும் என்று யோசிப்பவரா நீங்கள்? நீங்களும் புகார் பெட்டியை அணுகலாம்.
என்ன மாதிரியான பிரச்சனைகள்?
உங்கள் வீட்டுக்கு அருகே, தெரு, ஊர், பயணிக்கும் இடத்துக்கு அருகே நடக்கும் என்ன மாதிரியான பிரச்சினையாகவும் இருக்கலாம். உதாரணத்துக்கு,
* மழை நீர் வடிகால் பிரச்சினை,
* குடிநீர்த் தட்டுப்பாடு,
* மோசமான சாலைகள்,
* மூடப்படாத பள்ளங்கள்,
* குப்பைகள் குவிப்பு,
* நோய்ப் பரவல் சூழல்
* தொழிற்சாலை கழிவுகளால் எதிர்கொள்ளும் விளைவுகள்
* தெருநாய்கள், கொசுக்களால் தொல்லை,
* பேருந்துகள் போதாமை,
* விளம்பர பதாகைகளின் இடையூறு
என எந்தப் பிரச்சினையாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
தொழில்நுட்ப சாதனங்கள் சூழ்ந்த காலத்தில் சைபர் குற்றங்கள் பெருகி வருகின்றன. சைபர் பண மோசடி, தனிப்பட்ட விவரங்கள் திருட்டு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லையா? நீங்களும் புகார் பெட்டியில் புகார் அளிக்கலாம்.
வெளியே பெயர் கூற விரும்பாத புகார்தாரரின் விவரங்கள் பொதுவெளியில் பகிரப்படாது.
ABP NADU-இன் புகார் பெட்டி: இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!
— ABP Nadu (@abpnadu) October 27, 2022
முழு விவரம்>>>> https://t.co/XRPjQTN7r0#PugarPetti #PugaarPetti #ABPNadu #புகார்பெட்டி #ABPNadu pic.twitter.com/OFiXXJqjQz
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம்.
பணமாகவோ, பொருளாகவோ பொருளாதார ரீதியாகப் பிறருக்கு உதவுவது மட்டுமே உதவி அல்ல. இத்தகைய உதவிகளும் முக்கியமானவை.
சாமானியர்களுக்கான உரிமைகளை சமத்துவத்துடன் நிலைநாட்டுவதே ஜனநாயகத்தின் முக்கியக் கடமை. ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் மக்களுடன் நெருக்கமானது ஊடகத் துறை. ABP NADU-வின் புகார் பெட்டி மூலம், சமூகப் பிரச்சினைகள் உரிய முறையில் தீர்க்க வழிவகை செய்யப்படும் என்று உறுதி அளிக்கிறோம்.
வாருங்கள் வாசகர்களே... 'புகார் பெட்டி' வாயிலாக சமுதாயப் பொறுப்பாற்றுவோம்!