மேலும் அறிய

Joe Biden | இருக்காரா? இல்லையா? ஜோ பைடன் எங்கே? ரேடாரில் சமூக வலைதளங்கள்

அமெரிக்க ஜனாதிபதி  தேர்தலில் இருந்து நான் விலகுகிறேன் என்று தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்த பிறகு தற்போது வரை ஜோ பைடன் பொது வெளியில் தோன்றாமல் இருப்பது சந்தேகத்தை கிளப்பியுள்ளது, இந்நிலையில் ஜோ பைடன் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதம் உலகம் முழுவதும் சமூக வளைத்தளங்களில் பரபரத்து வருகிறது

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5 அன்று  நடைப்பெற உள்ள நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் களத்தில் நிற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது..

அதற்கேற்றது போல் தேர்தலுக்கான பிரச்சாரங்களிலும் இருக்கட்சி வேட்பாளர்களும் கடுமையாக மோதிக்கொண்டர்.. இப்படி பட்ட சூழலில் தான் அதிபர் வேட்பாளர் என முன்மொழியப்பட்டு வந்த ஜோ பைடன் திடிரென தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை என கடந்து ஞாயிறன்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அறிவித்தார். மேலும் தனக்கு பதிலாக தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிசை வேட்பாளராகவும் முன்மொழிந்தார்.

இது உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது, ஏன் திடிரென ஜோ பைடன் இந்த முடிவை எடுத்தார், இந்த அறிவிப்புக்கு பிண்ணனில் இருக்கும் காரணம் என்ன என்று எந்த விதமான அதிகார்ப்பூர்வ தகவலும் தற்போது வரை வெளிவரவில்லை.

இதில் மேலும் பல்ஸை எகிற வைப்பது என்னவென்றால் ஜோ பைடன் என்ன ஆனார், நலமுடன் இருக்கிறாரா என்பது கேள்வி குறியாக உள்ளது. அவருக்கு இறுதியாக கோவிட் தொற்று ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக  டெலவேரில் உள்ள ரெஹோபோத் பீச் ஹவுசில் ஜோ பைடன் தங்கி ஓய்வெடுத்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதியின் பொது அட்டவணையில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த செய்தியை அமெரிக்கர்கள் பலர் நம்ப மறுக்கின்றனர். 

மேலும் அதிபர் பைடனின் இந்த வார நிகழ்வுகள் குறித்த அட்டவணையும் வெளியிடப்படவில்லை. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது, இத்தகைய சூழலில் பத்திரிக்கை மற்றும ஊடகத்தினரை சந்திக்காமல், எந்த விதமான தகவலையும் வெளிபடுத்தாமல் ஜோ பைடன் இருப்பது சந்தேகத்தை அதிகரித்துள்ளது. 

கடைசியாக ஜோ பைடன் பொது வெளியில் தென்ப்பட்டது  டெலவேர் விமான நிலையத்தில் தான் அதன் பிறகு என்ன ஆனார் என்பது தற்போது வரை தெரியவில்லை.

இந்நிலையில் பைடன் எங்கே போனார் என்று #coup என்ற ஹாஸ் டேக்கை பதிவிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர் பலர். 

அதில், எங்கே போனார் ஜோ பைடன், அவர் ஏன் இதுவரை வெளியே வரவில்லை, அவருக்கு ஏதும் உடல்நிலை கோளாறா? யாருடைய அழுத்ததால் பைடன் வேட்பாளராக நிற்கவில்லை, ஏன் பின்வாங்கினார் போன்ற கேள்விகளையும் சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர். 

இதனால் #Coup என்ற ஹாஷ்டாக் டிரெண்ட் ஆகி வருகிறது, இது மட்டுமில்லாமல் பைடன் பதவி விலகளுக்கு பின்னால் எதோ பெரிய சதி நடந்து இருப்பதாகவும் பலர் பதிவிட்டு வருகின்றனர்

இந்நிலையில் கோவிட் அறிகுறிகள் குறந்துள்ளதாகவும், பைடனின் உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது, அவர் தன்னுடைய ஜனாதிபதிக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார் என வெள்ளை மாளிகை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகம் வீடியோக்கள்

Joe Biden | இருக்காரா? இல்லையா? ஜோ பைடன் எங்கே? ரேடாரில் சமூக வலைதளங்கள்
Joe Biden | இருக்காரா? இல்லையா? ஜோ பைடன் எங்கே? ரேடாரில் சமூக வலைதளங்கள்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து  வழக்கு...என்ன சொன்னாங்க
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு...என்ன சொன்னாங்க
Embed widget