Tamilnadu Roundup: கடலூரில் கோர விபத்து.. எடப்பாடி 2வது நாளாக சுற்றுப்பயணம் - தமிழகத்தில் இதுவரை
தமிழ்நாட்டில் இதுவரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில் மீது மோதிய தனியார் பள்ளி வேன்
கடலூர் மாவட்டத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்
கடலூர் - மயிலாடுறை ரயில் வரும் நேரத்தில் ரயில்வே கேட் மூடப்படாததே விபத்திற்கு காரணம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்
பள்ளி மாணவர்கள் சென்ற வேன் விபத்திற்குள்ளான விவகாரத்தில் ரயில் கேட்கீப்பர் மீது சரமாரி தாக்குதல்
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 28 ஆயிரம் கன அடியாக குறைந்தது
கோவையில் 2வது நாளாக சுற்றுப்பயணத்தை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி - நடைபயணத்தில் மக்களைச் சந்தித்தார்
திமுக ஆட்சியில் கடன் அளவு அதிகரிப்பு - அரசின் வருவாய் அதிகரித்தாலும் புதிய திட்டங்கள் இல்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
மதுரை மாநகராட்சி மோசடி புகார்; மதுரை மண்டல திமுக தலைவர்கள் ராஜினாமா
மத்திய அரசை கண்டித்து நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம் - பெரும் பரபரப்பு
மதுரை, சென்னை உள்ளிட்ட 8 இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்தது
சென்னை பெருங்குடி சாலையில் திடீரென 100 அடி தொலைவிற்கு விரிசல் - பொதுமக்கள் அச்சம்
விழுப்புரத்தில் இன்று ராமதாஸ் தலைமையில் செயற்குழு, சென்னையில் இன்று அன்புமணி தலைமையில் நிர்வாகக்குழு - பாமகவினர் அதிர்ச்சி
போதைப் பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா வழக்கில் ஜாமின் வழக்கில் இன்று விசாரணை
காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார் மரண வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணை
அஜித்குமார் மரணம்; திருப்புவனத்தில் இன்று தடையை மீறி சீமான் ஆர்ப்பாட்டம்
ரயிலை கடத்துவதாக மிரட்டல்; ஏற்காடு ரயில் பயணி கைது





















