மேலும் அறிய

IND vS ENG Test: அடிச்சிட்டாங்க சார்.. லார்ட்ஸில் ”வேகமும், பவுன்ஸும் தூக்கலா இருக்கணும்” இங்கிலாந்து கதறல்

IND vS ENG Lords Test: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு, லார்ட்ஸ் மைதானத்தின் ஆடுகளத்தை கூடுதல் பவுன்ஸ் கொண்டதாக தயார் படுத்த இங்கிலாந்து திட்டமிட்டுள்ளதாம்.

IND vS ENG Lords Test: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சரை களமிறக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளதாம்.

இந்தியா Vs இங்கிலாந்து - லார்ட்ஸ் டெஸ்ட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான எட்க்பஸ்டன் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடர் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில், 1-1 என சமநிலையை எட்டியுள்ளது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 10ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க உள்ளது.  இந்த போட்டிக்கு அதிக உயிர்ப்புள்ள ஒரு ஆடுகளத்தை வழங்குமாறும் லார்ட்ஸ் மைதான பராமரிப்பு குழுவிற்கு இங்கிலாந்து அணி கோரிக்கை விடுத்துள்ளது.

”பவுன்ஸும், வேகமும் தூக்கலா இருக்கனும்”

காயம் காரணமாக கடந்த 2021ம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் களம் இறங்குவார் என கூறப்படுகிறது. இதுபோக, இரண்டாவது போட்டியில் தசைபிடிப்பு காரணமாக களமிறங்காத வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சனும் மூன்றாவது போட்டியில் களமிறங்குவார் என தகவல்கள் தெரிவிக்கினன. இந்நிலையில் தான், “மூன்றவாது டெஸ்ட் போட்டிக்கு சற்றே அதிக வேகம், சற்றே அதிக பவுன்ஸ்” தன்மை கொண்ட ஒரு ஆடுகளத்தை அமைத்து தறுமாறு லார்ட்ஸ் மைதான பராமரிப்பு குழுவிடம் இங்கிலாந்து பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் வலியுறுத்தியுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்ப்ரிக்கா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்  இறுதிப்போட்டியில், இதே மாதிரியான ஆடுகளத்தை லார்ட்ஸ் மைதானம் கொண்டிருந்தது. அதில், பேட் கம்மின்ஸ் மற்றும் ரபாடா ஆகியோர் நல்ல ஸ்விங்கையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதே மாதிரியான ஆடுகளத்தையே இங்கிலாந்து எதிர்பார்க்கிறதாம்.

பயந்த இங்கிலாந்து அணி?

அதிரடியான ஆட்டத்தை விரும்பும் இங்கிலாந்து அணி, பந்துவீச்சாளர்களுக்கு பெரிதும் சாதகமாக இருக்காத ஆடுகளத்தையே விரும்பும். அதற்கான உதாரணமாக தான் அதிக பவுன்ஸ் இருந்த லீட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனால், எட்க்பஸ்டன் மைதானத்தின் ஆடுகளம் இந்திய துணைகண்டத்தில் இருக்கக் கூடியதை போன்று அமைந்தது. அதன் காரணமாகவே இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை காட்டிலும், இந்தியாவின் முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோரால் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. இந்நிலையில் தான், இங்கிலாந்து அணி தங்களுக்கே உரித்தான வேகம் மற்றும் பவுன்ஸிற்கு ஏற்ற ஆடுகளத்தை அமைத்திட விருப்பம் தெரிவித்துள்ளது. 

தடுமாறும் இங்கிலாந்து அணி:

இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன் மற்றும் ப்ராட் ஆகியோர் இருந்த காலகட்டத்தில் அவர்களது வேகத்துடன் கூடிய பவுன்ஸ் மற்றும் ஸ்விங் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருந்தது. ஆனால், அத்தகைய பந்துவீச்சாளர்கள் தற்போதைய இங்கிலாந்து அணியில் இல்லாததை முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் காண முடிந்தது. இதனாலேயே பந்துவீச்சை காட்டிலும் பேட்டிங்கில் அதிகம் சவால் அளிக்கும் விதமாக செயல்பட்டனர். ஆனால், இதே நிலை தொடர்ந்தால் இந்த தொடரில் இந்திய அணிக்கு சாதகமான சூழல் அதிகரிக்கலாம் என்பதை எட்க்பஸ்டன் போட்டி நிரூபித்துள்ளது. இந்நிலையில், ஆர்ச்சர் அணிக்கு திரும்புவதால், மீண்டும் பவுன்ஸ் மற்றும் ஸ்விங்கிற்கு சாதகமான ஆடுகளத்தின் மீது இங்கிலாந்து கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இதனால் கடந்த இரண்டு போட்டிகளிலும் பேட்டிங்கில் அதகளம் செய்த இந்திய வீரர்களுக்கு, லார்ட்ஸ் டெஸ்ட் சவாலானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், பும்ரா அணிக்கு திரும்புவது இந்தியாவிற்கும் கூடுதல் பலமாக பார்க்கபப்டுகிறது.

லார்ட்ஸில் இந்திய அணி:

லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணியின் டெஸ்ட் வரலாறு என்பது மிகவும் மோசமானதாகவே உள்ளது. இதுவரை 19 போட்டிகளில் விளையாடி 3 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 12 போட்டிகளில் தோல்வியும், 4 போட்டிகளில் ட்ராவும் கண்டுள்ளது.  அதேநேரம், இந்த மைதானத்தில் கடைசியாக விளையாடிய 3 போட்டிகளில் இரண்டில் இந்திய அணி வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. 2014 ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2018ம் ஆண்டு விராட் கோலி தலைமையில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதேநேரம், 2021ம் ஆண்டு 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Hero Splendor+ vs Hero HF Deluxe: தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
Embed widget