கடன்கார பாகிஸ்தானுக்கு 1 B நிதி இந்தியா பேச்சை கேட்காத IMF மோடியின் அடுத்த மூவ்? IMF Loan to Pakistan
இந்தியா பேச்சை கேட்காத IMF கடன்கார பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் நிதியுதவி வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் வழங்கும் கடனை தவறான வழியில் பாகிஸ்தான் பயன்படுத்தக்கூடும் என இந்தியா குற்றம்சாட்டி இருந்தது. இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு, சர்வதேச நாணய நிதியம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, பாகிஸ்தானுக்கு புதியதாக 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. காலநிலை மீள்தன்மை திட்டத்தின் கீழ் இந்த கடனுதவி வழங்கப்பட உள்ளது. இதுபோக, பாகிஸ்தானுக்கு 7 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கும் மீள்தன்மை திட்டத்தின் முதல் ஆய்வுக் கூட்டத்தின் முடிவில், 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை விடுவிப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், இந்த கடனுதவி திட்டத்தின் கீழ், சவாலான சர்வதேச சூழலுக்கு மத்தியிலும், பொருளாதாரம் மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதில் பாகிஸ்தான் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் வெளிநாட்டுக் கடன் 130 பில்லியன் டாலராக உயர்ந்ததுள்ளது. பாகிஸ்தானின் வறுமை விகிதம் 2024 நிதியாண்டில் 40.5 சதவிகிதமாக உயர்ந்தது என்பது குறிப்பிடதக்கது.
ஆய்வுக்கூட்டத்தில் பேசிய இந்தியா, பாகிஸ்தான் நீண்டகாலமாக சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கிய நாடாக இருந்து வருகிறது. மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட நிபந்தனைகளை செயல்படுத்துவதிலும் கடைப்பிடிப்பதிலும் மிகவும் மோசமான பதிவுகளைக் கொண்டுள்ளது. 1989 முதல் 35 ஆண்டுகளில், பாகிஸ்தான் 28 ஆண்டுகளில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன்களைப் பெற்றுள்ளது. 2019 முதல் கடந்த 5 ஆண்டுகளில், 4 சர்வதேச நாணய நிதியத் திட்டங்கள் உள்ளன. அதன் மூலம் முன்னேற்றம் பெற்றிருந்தால், அந்நாடு மீண்டும் மீண்டும் கடன் பெற வேண்டிய அவசியமில்லை.
பொருளாதார விவகாரங்களில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆழமாக வேரூன்றிய தலையீடு, கொள்கை சறுக்கல்கள் மற்றும் சீர்திருத்தங்களை தலைகீழாக மாற்றுவதற்கான குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துகிறது. ஒரு சிவில் அரசாங்கம் இப்போது ஆட்சியில் இருந்தாலும் கூட, ராணுவம் உள்நாட்டு அரசியலில் ஒரு பெரிய பங்கை வகிக்கிறது. தற்போது சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கினால், அதையும் பாகிஸ்தான் எல்லை தாண்டிய தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தக் கூடும் எச்சரித்து இருந்தது. ஆனால், அதையும் மீறி வாக்கெடுப்பின் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் அளித்துள்ளது.





















