மேலும் அறிய
Myanmar Earthquake: மியான்மர் நிலநடுக்கத்தால் குறைந்தது 150 பேர் உயிரிழப்பு: அதிர்ச்சியளிக்கும் புகைப்படங்கள்!
Myanmar Thailand Earthquake: மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கமானது தாய்லாந்தையும் மிக கடுமையாக பாதித்துள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட 6 நிலநடுக்கத்தால் 150க்கும் மேற்பட்டோர் உயிரிந்துள்ளதாக தகவல்.

மியான்மர் - தாய்லாந்து நிலநடுக்கம்
1/6

படம்: சரிந்து விழும் 30 மாடி கட்டம்: மியான்மரில் இன்று ( மார்ச் 28, 2025) காலை சுமார் 11 மணியளவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால், அண்டை நாடான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும், இந்த நிலநடுக்கமானது, மியான்மரின் அண்டை நாடுகளான இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், வங்காள தேசம் மற்றும் சீனாவிலும் உணரப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து சில மணி நேரங்களில் மொத்தமாக 6 நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன
2/6

படம்: கட்டடத்தில் மேல் தளத்தில் உள்ள் நீரானது ( நீச்சல் குளம் என கூறப்படுகிறது ) அருவி போல கொட்டும் காட்சி:
3/6

படம்: சிக்கியவர்களை மீட்கும் காட்சி: இந்நிலையில், நிலநடுக்கத்தால் இதுவரை குறைந்தபட்சம் 150 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும், 732க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாவும் , ஆயிரக்கணகானோர் மருத்துவமனயில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் எனவும் கூறப்படுகிறது.
4/6

படம்: தப்பித்து ஓடும் மக்கள்:
5/6

இந்த தருணத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது, “ மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கச் சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன். இந்தியா, சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது. எங்கள் அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுடன் தொடர்பில் இருக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளேன் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
6/6

அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தேவையான உதவிகளை செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், உலக சுகாதார மையமும் தேவையான அனைத்து உதவிகளை செய்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Published at : 29 Mar 2025 12:11 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
ஐபிஎல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion