EB Bill: கரண்ட் பில் கன்னா பின்னான்னு வருதா? எங்க தப்பு நடக்குது? மின்சார யூனிட் அளவு, கட்டணத்தை சரிபார்ப்பது எப்படி?
EB Bill Calculation: மின்சார கட்டணம் வழக்கத்தை விட அதிகமாக வந்தால், அது துல்லியமாக இருக்கிறதா? என்பதை எப்படி உறுதி செய்யலாம் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

EB Bill Calculation: மின்சார கட்டணம் வழக்கத்தை விட அதிகமாக வந்தால், அது சரியாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
மின்சார கட்டணத்தில் குழப்பமா?
வழக்கமாக உங்கள் வீட்டிற்கு வரக்கூடிய மின்சார கட்டணம், திடீரென கிடுகிடுவென உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதா? இதனால் கட்டண விவரம் துல்லியமாக இருக்கிறதா? அல்லது பயன்படுத்திய மின்சாரத்தை அளவீடு செய்வதில் ஏதேனும் தவறு நடந்துள்ளதா? என்பது போன்ற பல கேள்விகள் உங்கள் மனதில் எழலாம். இந்த சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள சில வழிகள் உள்ளன. இதன் மூலம் நீங்கள் பயன்படுத்திய மின்சாரத்திற்கு நிகரான கட்டணம் தான் உங்களுக்கு வந்துள்ளதா? அல்லது கணக்கீட்டில் மனித தவறு ஏதேனும் நிகழ்ந்துள்ளதா? என்ற விவரங்களை நீங்கள் அறியலாம்.
மின்சார கட்டணத்தை சரிபார்ப்பது எப்படி?
- திடீரென அதிகரித்த மின்சார கட்டணம் சரியாக இருக்கிறதா? என்பதை ஆராய, முதலில் மீட்டரில் உள்ள ரீடிங்கும் பில் தாளில் உள்ள ரீடிங்கும் ஒத்துப்போகிறதா? என்பதை கவனியுங்கள். ஒருவேளை இரண்டும் ஒத்துப்போகவில்லை என்றால், அது கணக்கீட்டின் போது ஏற்பட்ட மனித தவறு மட்டுமே. உடனே மின்வாரியத்தை தொடர்பு கொண்டு உங்களது கட்டணத்தை திருத்த முடியும்.
- தொடர்ந்து, நீங்கள் பயன்படுத்திய மின்சாரத்திற்கு விதிக்கப்படும் கட்டண விகிதங்களை மதிப்பாய்வு செய்து, சரியான அளவில் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதா? முதல் 100 யூனிட்களுக்கு கட்டணம் இல்லை என்பது போன்ற மானியங்கள் வழங்கப்பட்டுள்ளனவா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்
- ஆனாலும் கட்டணம் அதிகமாக இருப்பதாக உணர்ந்தால், புதிய பில்லில் உள்ள மின்சார பயன்பாட்டு அளவை (KWh) முந்தைய மின்சார பில்லுடன் ஒப்பிட்டு, கூடுதலாக மின்சாரத்தை பயன்படுத்தி இருக்கிறீர்களா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
- TANGEDCO இணையதளத்தை அணுகி அதில் உள்ள மின்சார கட்டண கால்குலேட்டரை பயன்படுத்தியும், நீங்கள் பயன்படுத்திய மின்சார யூனிட்களுக்கான கட்டணத்தை அறியலாம்
மின்சார கட்டணம் - கவனிக்க வேண்டியவை?
- மின்சார கட்டணத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவா? என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும்
- உங்களது மின்சார பயன்பாட்டு முறையை ஆராயுங்கள் - ஏசி மற்றும் வாஷிங்மிஷின் போன்ற அதிகமாக மின்சாரத்தை உறிஞ்சக்கூடிய மின்சாதனங்களை அதிகம் பயன்படுத்தினீர்களா? என்பதை கருத்தில் கொள்ளுங்கள்
- வீட்டில் அதிகமான நபர்கள் இருப்பது அல்லது மின்சாதனங்களை வழக்கத்தை காட்டிலும் அதிகமாக பயன்படுத்துவதும் கட்டண உயர்வுக்கு காரணமாக இருக்கலாம்
இதற்கு மேலும் மின்சார கட்டணத்தை கணக்கிடுவதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் மின்னகத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசமுடியும். அல்லது அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை அணுகியும் உங்களது சந்தேகங்கள் மற்றும் குறைகளுக்கு தீர்வு காணலாம்.
மின்னகம் தொலைபேசி எண் - 94987 94987
தமிழ்நாட்டில் வீடுகளுக்கான மின்சார கட்டண விவரம்:
தமிழ்நாட்டில் வீடுகளுக்கான மின்சார பயன்பாட்டில் முதல் 100 யூனிட்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. அதையும் தாண்டி வசூலித்தால் பல்வேறு பிரிவுகளின் கீழ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
- 0 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.80 கட்டணம் செலுத்த வேண்டும்
- 401 யூனிட் முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 6.45 கட்டணம் செலுத்த வேண்டும்
- 501 யூனிட் முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.8.55 கட்டணம் செலுத்த வேண்டும்
- 601 யூனிட் முதல் 800 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.9.65 கட்டணம் செலுத்த வேண்டும்
- 801 யூனிட் முதல் 1000 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.10.70 கட்டணம் செலுத்த வேண்டும்
- 1000 யூனிட்டுகளுக்கு மேல் ஒரு யூனிட்டிற்கு ரூ.11.80 கட்டணம் செலுத்த வேண்டும்





















