"நரிப்படை சிங்கத்தை வெல்லுமா? மோடினு சொல்ல தைரியம் இருக்கா?"பாக்.MP Pakistan MP slams Pakistan
’’ பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஒரு கோழை
இந்திய பிரதமர் மோடியின் பெயரை கூட உச்சரிக்க பயப்படுகிறார். நரிப்படைகளை கொண்டு சிங்கங்களை ஒருபோதும் எதிர்க்க முடியாது"என பாகிஸ்தான் எம்பி ஷாகித் அகமத் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூரை கையிலெடுத்து 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து பூஞ்ச் பகுதியில் எல்லைமீறிய பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் தக்க பதிலடி கொடுக்கும் நோக்கில் பாகிஸ்தானை எதிர்க்க இந்தியா தயார் நிலையில் இருந்தது. இதனையடுத்து நேற்று காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளுக்குள் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன்களை வானிலேயே அழித்தொழித்தது இந்தியா. இதனையடுத்து பாகிஸ்தான் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த பொறுமையிழந்த இந்தியா, பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம்,லாகூர் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் வலிமைவாய்ந்த படை பலம் பாகிஸ்தானை அலறவிட்டு வருகிறது. இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் அந்நாட்டு எம்பிக்கள் இந்தியா குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய கருத்துகள் வீடியோக்களாக வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இம்ரான் கட்சியின் எம்பி ஷாகித் முகமது
’’பாகிஸ்தானின் நரிப்படையால் சிங்கங்களை எதிர்த்துப் போராட முடியாது என பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலேயே அந்நாட்டை விமர்சித்து கடுமையாக குற்றச்சாட்டியுள்ளார்.





















