மேலும் அறிய

பகுதிநேர ஆசிரியர்கள் கைது; துண்டு சீட்டு தொலைஞ்சிருச்சா? முதல்வரை கிழித்தெடுத்த ஈபிஎஸ்

"ஆட்சி அமைந்ததும், பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கையை திமுக நிறைவேற்றும்... ஆக" என்று படித்த துண்டுச் சீட்டு இப்போது தொலைந்து விட்டதா?- ஈபிஎஸ் கேள்வி.

பணி நிரந்தரம் கோரி போராட்டத்திற்கு புறப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதற்கு, எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:

’’பணி நிரந்தரம் கோரி போராட்டத்திற்கு புறப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், ஸ்டாலின் மாடல் திமுக அரசால் அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 2021 தேர்தலின்போது, அன்றைக்கு எதிர்க் கட்சித் தலைவராக இருந்த நீங்கள், "ஆட்சி அமைந்ததும், பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கையை திமுக நிறைவேற்றும்... ஆக" என்று படித்த துண்டுச் சீட்டு இப்போது தொலைந்து விட்டதா?

சிறை நிரப்பும் போராட்டம் செய்யும் அளவிற்கு பகுதி நேர ஆசிரியர்களை இந்த திமுக அரசு தள்ளியிருப்பது வெட்கக்கேடானது.

அதே போல, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர் ரமேஷ் பாபு கத்தியால் குத்தப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே, சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட போதே, அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், இது ஸ்டாலின் மாடல் அல்லவா? வழக்கம் போல கடந்து சென்றதன் விளைவே இந்த சம்பவம்.

மருத்துவருக்கே பாதுகாப்பு இல்லையா?

அரசு மருத்துவமனையில், அதுவும் மருத்துவருக்கே பாதுகாப்பு இல்லை என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலை; இதற்கு சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கத் திராணியற்ற பொம்மை முதல்வரே பொறுப்பு! வாய்க்கு வந்ததை வாக்குறுதி என அளித்துவிட்டு, அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி, அவர்களை தெருவில் போராட நிறுத்தியதோடு அல்லாமல், அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலைக்கு தமிழ்நாட்டை படுபாதாளத்திற்கு தள்ளியதுதான் ஸ்டாலின் Failure மாடல் சாதனை!

சட்ட நடவடிக்கை இல்லாமல் விடுதலை

கைது செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், எந்தவித சட்ட நடவடிக்கையும் இன்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்; ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவரை தாக்கிய நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்’’.

இவ்வாறு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி தேர்தல் திருவிழா: ஏப்ரல் 7 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை - முழு விபரம் உள்ளே!
புதுச்சேரி தேர்தல் திருவிழா: ஏப்ரல் 7 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை - முழு விபரம் உள்ளே!
கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு அடித்த லக்; 15,000 பேருக்கு AI இலவச பயிற்சி- எதற்கு? எப்படி? விவரம்
கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு அடித்த லக்; 15,000 பேருக்கு AI இலவச பயிற்சி- எதற்கு? எப்படி? விவரம்
Class 12 Result: பிளஸ் 2 தேர்வில் 93.88% மதிப்பெண்- முடிவுகள் வெளியாகும் முன்னே பரிதாபமாக பலியான மாணவி
Class 12 Result: பிளஸ் 2 தேர்வில் 93.88% மதிப்பெண்- முடிவுகள் வெளியாகும் முன்னே பரிதாபமாக பலியான மாணவி
RTE Admission 2026: தனியார் பள்ளியில் இலவச கல்வி- ஆர்டிஇ சேர்க்கை எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
RTE Admission 2026: தனியார் பள்ளியில் இலவச கல்வி- ஆர்டிஇ சேர்க்கை எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்
மீண்டும் திமுக ஆட்சி! வெளியான சர்வே முடிவுகள்.. காலரை தூக்கும் ஸ்டாலின்
விஜய்க்கு காவல்துறை செக்வீட்டில் இருந்தே பரப்புரை?கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
CM Stalin: இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு; காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது? முதல்வர் ஸ்டாலின் பேச்சு
CM Stalin: இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு; காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது? முதல்வர் ஸ்டாலின் பேச்சு
Trump Iran War: ”அடிச்சு காலி பண்ணுங்க, 2-3 வாரம் தான் டைம்” - ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் ஆர்டர் - ஹெல்ப்புக்கு வாங்க
Trump Iran War: ”அடிச்சு காலி பண்ணுங்க, 2-3 வாரம் தான் டைம்” - ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் ஆர்டர் - ஹெல்ப்புக்கு வாங்க
2026 சட்டமன்ற தேர்தல் பணியாளர்களுக்கு ஊதியம் அதிரடி உயர்வு! எவ்ளோ தெரியுமா?
2026 சட்டமன்ற தேர்தல் பணியாளர்களுக்கு ஊதியம் அதிரடி உயர்வு! எவ்ளோ தெரியுமா?
Trump Vs Starmer: “போருக்குள்ள எங்கள இழுக்க முடியாது“ ஒரே போடாய் போட்ட ஸ்டார்மர்; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில்
“போருக்குள்ள எங்கள இழுக்க முடியாது“ ஒரே போடாய் போட்ட ஸ்டார்மர்; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில்
iPhone 20: ஆப்பிள்-னாலே Advanced தான்; முற்றிலும் புதிய தோற்றத்துடன் வரவிருக்கும் ஐபோன் 20; எப்போ லாஞ்ச்.?
ஆப்பிள்-னாலே Advanced தான்; முற்றிலும் புதிய தோற்றத்துடன் வரவிருக்கும் ஐபோன் 20; எப்போ லாஞ்ச்.?
VinFast MPV EV: வின்ஃபாஸ்ட் மின்சார 7 சீட்டருக்கான முன்பதிவு தொடக்கம் - கட்டணம் என்ன? பேட்டரி, ரேஞ்ச், விலை

Embed widget