Freedom Review : சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம் படம் எப்படி இருக்கு..இதோ விமர்சனம்
Freedom Movie Review : சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் , லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ள ஃப்ரீடம் திரைப்படத்தின் முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்

சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம்
சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் , லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ள படம் ஃப்ரீடம் . டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் வரும் ஜூலை 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 90களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு, பரபரப்பான திரைக்கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது. சுதேவ் நாயர் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் கேஜிஎஃப் மாளவிகா, போஸ்வெங்கட், மு ராமசாமி, ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழில் பல பிரமாண்ட படங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றிய பாண்டியன் பரசுராமன், முதல் முறையாக விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படத்தினைத் தயாரித்துள்ளார். ஃப்ரீடம் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்
ஃப்ரீடம் திரைப்பட விமர்சனம்
1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியின் கொலையைத் தொடர்ந்து இலங்கையில் இருந்து தமிழ் நாட்டிற்கு அகதிகளாக வந்த தமிழர்கள் சிலர் வேலூர் சிறையில் அடைக்கபடுகிறார்கள் . இந்த தமிழர்கள் சிறையில் அனுமதித்த கொடுமைகளை முதல் பாதி முழுக்க சொல்கிறது படம். இந்த சிறையில் இருந்து தப்பித்து செல்வது சுவாரஸ்யமான இரண்டாம் பாகமாக சொல்லப்பட்டிருக்கிறது
டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற ஃபீல் குட் படத்திற்கு பின் மிகவும் சீரியஸான கதையில் சசிகுமார் நடித்துள்ளார். படத்தின் ஒன்லைன் சுவாரஸ்யாக இருந்தாலும் இந்த திரைக்கதை சராசரியாக இருப்பதால் கவனமீர்க்க தவறுகிறது ஃப்ரீடம் . சசிகுமாரின் நடிப்பு கதையை தாங்கிச் செல்கிறது. ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை படத்தில் பாசிட்டிவ் அம்சங்கள். படத்தின் கடைசி 30 நிமிடங்கள் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. ஆனால் யூகிக்கக் கதைத் திருப்பங்கள், சராசரியான திரைக்கதையால் ஃப்ரீடம் படத்தை ஒன் டை வாட்ச் என்று சொல்லலாம்
#FREEDOM — WINNER 🏆 🏆 🏆 🏆
— Let's X OTT GLOBAL (@LetsXOtt) July 9, 2025
This isn’t just another movie — it’s deeply rooted in a real-life incident that took place in India, delivering a raw and emotionally charged narrative.@SasikumarDir delivers a career-defining performance — the way he embodied the character is… pic.twitter.com/KxQTDFvvBg





















