. 2026ல் விஜய் தான் முதல்வரா!.. தமிழகத்தில் இனி இலவசம் கிடையாது.. வைரலாகும் பட போஸ்டர்!
2026ஆம் ஆண்டில் தவெக தலைவர் விஜய் முதல்வர் ஆனது போன்ற ஒரு படத்தின் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் தவகெ என்ற கட்சியை தொடங்கிய பிறகு தீவிரமாக அரசியலில் களம் கண்டு வருகிறார். இவரது நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படம் தான் கடைசிப்படமாகும். அரசியலில் களமிறங்கியுள்ளதால் சினிமாவிலிருந்து முழுமையாக வெளியேற இருப்பதாக விஜய் தெரிவித்துள்ளார். இந்நிலையில், 2026ல் விஜய் முதல்வர் என்ற போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொங்கல் ரிலீஸ்
இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். விஜய் பிறந்தநாளையொட்டி வெளியான டீசர் ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது. இதில், காக்கி சட்டை அணிந்த படி வந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். வரும் 2026ம் ஆண்டு பொங்கலுக்கு ஜனநாயகன் திரைப்படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயின் கடைசி திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அரசியல் விமர்சனம்
நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பிறகு சினிமாவை காட்டிலும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். திரையுலகில் இருப்பவர்களே விஜயை ட்ரோல் செய்வது போன்ற வீடியோக்களும் அதிகம் பகிரப்படுகிறது. மேலும், தவெக லட்டர் பேட் கட்சி என்றும் விமர்சித்துள்ளனர். ஒவ்வொரு நாளும் விஜயின் அரசியல் வருகை குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகிறது. சினிமா விமர்சகர்களும் விஜயின் அரசியலை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 2026 தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகவும் விஜயை அக்கட்சி தேர்வு செய்திருக்கிறது. சினிமாவை தாண்டி அரசியல் களம் என்பதால் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
2026ல் விஜய்தான் முதல்வரா!
விஜய் 2026 தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், 2026ல் விஜய்தான் முதல்வர் என கூறி போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் அப்புக்குட்டி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் யாதும் அறியான். இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. நேரத்தை கான்சப்ட்டாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. யாதும் அறியான் படத்தின் டிரைலரில் விஜய் 2026ஆம் ஆண்டு முதல்வர் ஆனது போன்ற போஸ்டர் வெளியானது. அதில் இலவசங்கள் கிடையாது, பெண்களுக்கான திட்டத்தை அறிவித்தார் முதல்வர் விஜய் என்ற போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





















