மேலும் அறிய

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சர்ச்சை கருத்து.. நீங்கதான் அந்த நேஷனல் கிரஷ்.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

நடிகை ராஷ்மிகா மந்தனா சாதிய ரீதியாக கூறிய கருத்து ஒன்று சர்ச்சையாக மாறியுள்ளது.

தென்னிந்திய படங்களில் முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கும் ராஷ்மிகா மந்தனா பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. என்னப்பா நேஷனல் கிரஷ்க்கு வந்த சோதனை என நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். படம் நடிப்பதை தாண்டி நமக்கு எதுக்கு மேடம் இந்த சமூக கருத்து என்றும் வாயை கொடுத்து மாட்டிக்கிட்டீங்க என்றும் கூறுகின்றனர். அப்படி என்னதான் அவர் கூறிவிட்டார் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

இடையில் நின்ற திருமணம்

கன்னடத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான க்ரிக் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு ஜோடியாக நடித்த ரக்சித் ஜெட்டியை திருமணம் செய்வதாக செய்திகளும் வெளியாகின. பிறகு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று பிறகு நடக்க இருந்த திருமணத்தை ராஷ்மிகா நிறுத்தியதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து தெலுங்கில் கீதா கோவிந்தம், புஷ்பா போன்ற படத்தின் வெற்றியால் புகழ் பெற்ற நடிகையாக மாறியிருக்கிறார் ராஷ்மிகா. இந்தியாவின் நேஷனல் கிரஷ் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரரும் அவரே. 

நான் தான் முதல் நடிகை

திரையுலகில் புகழ் பெற்ற நடிகையாக இருக்கும் ராஷ்மிகா அண்மையில் அளித்த பேட்டியில் தனது சினிமா மற்றும் வாழ்க்கை பற்றி கூறியது சர்ச்சையாக மாறியுள்ளது. அப்போது, சினிமாவுக்குள் வருவது தனக்கு எளிதான ஒன்றாக இல்லை. கொடுவா என அழைக்கப்படும் கூர்க் சமூகத்தில் இருந்து யாருமே இதுவரை சினிமாவுக்குள் வந்தது இல்லை. அந்த சமூகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த முதல் ஆள் நான் தான் என்று நினைக்கிறேன் என தெரிவித்திருந்தார். இவரது இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 

90களில் தென்னிந்திய நடிகைகள்

கூர்க் சமூகத்தில் இருந்து இதற்கு முன்பு பல நடிகைகள் திரைத்துறைக்கு வந்துள்ளனர். குறிப்பாக 90களின் இறுதியில் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை பிரேமா அந்த சமூகத்தை சேர்ந்தவர் தான் என ராஷ்மிகாவுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், குல்ஷன் தேவையா, நிதி சுப்பையா உள்ளிட்ட சிலர் கொடவா சமூகத்தை சார்ந்தவர்கள் தான் என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.  

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget