Train accident: சோகம்.. கடலூரில் ரயில் மீது மோதிய பள்ளி வேன் - பச்சிளம் மாணவர்கள் மரணம்
கடலூர், சிதம்பரம் அருகே ரயில் மீது பள்ளி வேன் மோதியதில் மாணவர்கள் பலரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அமைந்துள்ளது செம்மங்குப்பம். இந்த பகுதியில் ரயில் தண்டவாளம் அமைந்துள்ளது. சாலையின் நடுவே அமைந்துள்ள அந்த தண்டவாளம் அருகே வாகனங்கள் பயணிப்பது வழக்கமாக உள்ளது.
ரயில் மீது மோதிய பள்ளிவேன்:
இந்த நிலையில், இன்று காலை குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் ஒன்று அந்த சாலையில் சென்றுள்ளது. தண்டவாளத்தில் ரயில் வருவதை கவனிக்காமல் பள்ளி வேனின் ஓட்டுனர் வேனை ஓட்டியதாக கூறப்படுகிறது. இதனால், பள்ளிக்குச் சென்ற குழந்தைகளுடன் சென்ற வேன் ரயில் மீது மோதியது.
இதில், பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்த பெற்றோர்கள், போலீசார், பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர்.
இந்த கோர விபத்தில் பள்ளி வேன் அப்பளம் போல சிதைந்துள்ளது. வேனில் இருந்த மாணவ, மாணவிகளின் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். தற்போது வரை 2 மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் உயிரிழந்த மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உண்டாகியுள்ளது.
நடந்தது என்ன?
கடலூர் மயிலாடுதுறை பயணிகள் ரயில் காலை 7 மணியளவில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. அப்போது, செம்மங்குப்பம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் பாதையில் வாகனங்கள் செல்லும் பாதையும் உள்ளது. அது ஆளில்லா ரயில்வே கேட் ஆக உள்ளது.
அந்த இடத்தில் ரயில் வருவதை அறியாத பள்ளி வேன் ஓட்டுனர், தண்டவாளத்தில் ரயில் வரவில்லை என்று கருதி வேனை இயக்கியுள்ளார். அப்போது, வேகமாக வந்து கொண்டிருந்த ரயில் வேன் மீது பயங்கரமாக மோதியது. இதனால், வேன் ரயிலின் வேகத்தில் இடித்து தள்ளப்பட்டு அப்பளம்போல நொறுங்கி தண்டவாளத்தில் இருந்து பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது.
5 குழந்தைகளும் மரணமா?
இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த ரயில்வே கேட்கீப்பர் முறையாக கேட்டை மூடாமல் தூங்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வேனில் 5 குழந்தைகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
படுகாயம் அடைந்த மாணவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அருகில் உள்ள கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.





















