மேலும் அறிய

Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!

ஹரியான ஏடிஎம் கொள்ளையர்களிடம் விடிய விடிய காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஏற்கனவே கடந்த 2021 தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் இதே கொள்ளை கும்பல் தங்களின் கைவரிசையை காட்டியுள்ளது தெரியவந்துள்ளது.. மேலும் காவல்துறையிடம் அவர்கள் அளித்துள்ள வாக்குமூலம் பகீரை கிளப்பியுள்ளது. 

கேரளவிம் திரிசூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை, வரிசையாக மூன்று ஏடிஎம்-களில் 65 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்துவிட்டு, கண்டெயினர் லாரியில் கேரள பார்டரை கடந்து தமிழகம் வழியாக தப்பில் செல்ல முயன்ற ஹரியானா கொள்ளையர்களை நாமக்களில் தமிழ்நாடு போலீஸ் சுற்றி வளைத்து சேஸ் செய்து பிடித்தனர். குறிப்பாக கேரளாவில் நடந்த கொள்ளை சம்பவத்தை காட்டிலும், நாமக்கல் நெடுஞ்சாலையில் காவல்துறைக்கும், கொள்ளையர்களுக்கும் இடையே நடந்த துப்பாகி சூடு, சேசிங் சீன் ஆகியவை தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே சுட்டத்தில் உயிரிழந்த நிலையில், ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் சிக்கிய 5 கொள்ளையர்களிடம் தமிழ்நாடு போலீசார் விசாரணையை தொடங்கினர். நேற்று மத்தியில் கேரள போலீஸ் தமிழ்நாட்டுக்கு வந்து விசாரணையில் இணைந்த நிலையில், நேற்று இரவு ஆந்திர போலீசாரும் தமிழகம் விரைந்தனர்.

இந்நிலையில் பிடிப்பட்ட 5 பேருக்குமே ஹிந்தி மொழி மட்டுமே பேச தெரிந்ததால், காவல்துறையினர் மொழி பெயர்பாளரை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பல்வேறு அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறிப்பாக கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு, கர்நாடகள் எல்லையான கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதியில் இதே ஹரியானா கொள்ளையர்கள் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் அன்மையில், ஆந்திராவின் கடப்பாவிலும் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் இதே கும்பல் கைவரிசையை காட்டியுள்ளது.

இப்படி ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய பகுதிகளில் ஏற்கனவே கொள்ளையடித்து விட்டதால், அங்கே காவல்துறையினர் அலர்ட்டாக இருக்க வாய்பிருக்க கூடும், அதனால் இந்த முறை கேரளா சென்று கொள்ளையடிக்கலாம் என்று இந்த கும்பல் திட்டமிட்டுள்ளது.

அதற்காக 7 பேரு கொண்ட ஹரியான கொள்ளையர்கள் சென்னை வந்துள்ளனர். இரண்டு கொள்ளையர்கள் கண்டெயினர் லாரியில் டெல்லியிலிருந்து சென்னை வந்த நிலையில், இருவர் டெல்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்துள்ளனர். மீதமுள்ள மூவர் கிரெட்டா காரில் சென்னை வந்துள்ளனர். கண்டெயினரில் வந்த சரக்குகளை மீனம்பாக்கம் அருகே அன்லோட் செய்துவிட்டு, சென்னையில் தங்கி தங்களுடைய கொள்ளை சம்பவத்திற்கு திட்டம் தீட்டியுள்ளது இந்த கும்பல்.

இந்நிலையில் கேரளாவின் திரிச்சூரில் திருட முடிவு செய்தவர்கள் சென்னையிலிருந்து கண்டெயினர் லாரியில் கிரெட்டா காரை ஏற்றிவிட்டு, திரிச்சூர் சென்றுள்ளனர். திரிச்சூர் ரீச் ஆனதும், முகமுடி அணிந்துக்கொண்டு, காஸ் கட்டிங் இயந்திரத்தை எடுத்துக்கொண்டு கிரெட்டா காரில் ஐந்து பேர் கொண்ட கும்பல் கேரளாவில்  2 மணி அளவில் இறங்கியுள்ளது. வழக்கமாகவே எஸ்.பி.ஐ ஏடிஎம்-மில் தான் எப்போதுமே அதிக பணம் இருக்கும் என்பதால், நெடுஞ்சாலையில் எஸ்பிஐ ஏடிஎம் எங்கெல்லாம் இருக்கிறது என்று கூகுல் மேப்பில் சர்ச் செய்து கண்டுபிடித்துள்ளனர்.

அதிகாலை 3 மணிக்கெல்லாம், வரிசையாக அடுத்த அடுத்த ஏடிஎம் சென்று கொள்ளையடித்துவிட்டு, காரை கண்டெயினரில் ஏற்றிக்கொண்ட கொள்ளை கும்பல் தமிழகம் வழியாக சென்னை அல்லது பெங்களூரு வரை வந்து அங்கிருந்து இந்த பணத்தை ஆள் ஆளுக்கு பிரித்துக்கொண்டு, தனி தனியாக எஸ்கேப் ஆகி ஹரியானா செல்வது தான் இந்த கொள்ளையர்களின் திட்டம்.

ஆனால் கேரளா போலீஸ் கொடுத்த அலர்ட், தமிழ்நாடு போலீசின் உடனடி நடவடிக்கையால் நாமக்களில் சிக்கிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். கைது செய்யபட்ட நபர்களிடமிருந்து 67 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் பணமும், கேஸ் வெல்டிங் இயந்திரமும் பறிமுதல் செய்யப்படிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று மத்தியம் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடலாம் என்ற தகவல் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் வீடியோக்கள்

Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!
Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan | TN Cabinet Shuffle | 2 சீனியர்கள் OUT.. ஜுனியர்கள் IN..! ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
பூர்வீக சொத்தில் பங்கு தராத ஆத்திரம்: மாமியாரை அரிவாளால்  வெட்டி கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை
பூர்வீக சொத்தில் பங்கு தராத ஆத்திரம்: மாமியாரை அரிவாளால் வெட்டி கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை
October Launch Cars: அக்டோபரில் வெளியாக உள்ள புதிய கார்கள், எஸ்யுவிக்கள்..! லிஸ்ட் இதோ, உங்க சாய்ஸ் எது?
October Launch Cars: அக்டோபரில் வெளியாக உள்ள புதிய கார்கள், எஸ்யுவிக்கள்..! லிஸ்ட் இதோ, உங்க சாய்ஸ் எது?
Fire cracker Accident: சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - ஆட்கள் சிக்கியுள்ளனரா?
சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - ஆட்கள் சிக்கியுள்ளனரா?
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Embed widget