மேலும் அறிய

Kalyani: 15 வயசுலயே அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்! அம்மாவிடமே இப்படி கேட்டாங்க - பிரபல நடிகை கூறிய அதிர்ச்சி தகவல்!

நடிகையும், தொகுப்பாளினியுமான கல்யாணி அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி வெளிப்படையாக தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் தான் கல்யாணி. அதன் பின்னர் பிரபு தேவா, முரளி நடித்த 'அள்ளித்தந்த வானம்' படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இந்த படத்தில் இவரது நடிப்பு அதிகம் பாராட்டப்பட்டது. இதை தொடர்ந்து  ஸ்ரீ, குருவம்மா, ரமணா ஆகிய படங்களில் நடித்திருந்தார். ஜெயம் படத்தில் சதாவின் தங்கையாக நடித்திருந்தவரும் கல்யாணி தான். இப்படி குழந்தை நட்சத்திரமாக நடித்த கல்யாணி தனது 15ஆவது வயதிலேயே ஹீரோயினாக மாறினார்.
 
 கத்தி கப்பல், , மறந்தேன் மெய்மறந்தேன் போன்ற சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.  ஆனால் இந்த படங்கள் எதுவும் வெற்றிபெறாத நிலையில், அதிரடியாக சீரியல் பக்கம் தாவினார். இவர் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே சாருலதா, அண்ணாமலை, ரோஜா, சின்ன பாப்பா, பெரிய பாப்பா ஆகிய சீரியல்களில்  நடித்திருந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் – சீசன் 1 மற்றும் , பிரிவோம் சந்திப்போம் – 2, தாயுமானவன் ஆகிய தொடர்களில் கதாநாயகியாக நடித்தார்.

Kalyani: 15 வயசுலயே அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்! அம்மாவிடமே இப்படி கேட்டாங்க - பிரபல நடிகை கூறிய அதிர்ச்சி தகவல்!

சீரியலில் பிஸியான நடிகையாக வலம் வந்த கல்யாணி கடந்த 2014 ஆம் ஆண்டு ரோகித் என்பவரை திருமணம் செய்து கொண்டு முழுமையாக திரையுலகை விட்டு விலகினார். அதன் பிறகு அமெரிக்காவில்  செட்டில் ஆனார்.  கல்யாணி மற்றும் ரோகித் தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

தன்னுடைய அம்மா மறைவுக்கு பின்னர் கணவருடன் சென்னையில் வசித்து வரும் கல்யாணி சினிமாவை விட்டு விலக என்ன காரணம் என்பது பற்றி பேசியிருகிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் 7 வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறேன். ஆனால், 15 வயதில் தான் ஹீரோயினாக நடிக்க துவங்கினேன். நான் கதாநாயகியாக நடித்த படங்களுக்கு பெரியளவிற்கு ரீச் கிடைக்கவில்லை. அதன் பிறகு கொஞ்ச நாட்கள் நான் வீட்டிலேயே இருந்தேன். 

Kalyani: 15 வயசுலயே அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்! அம்மாவிடமே இப்படி கேட்டாங்க - பிரபல நடிகை கூறிய அதிர்ச்சி தகவல்!

அப்போது தொகுப்பாளினி வாய்ப்பு என்னை தேடி வந்தது. அந்த நிகழ்ச்சியை சம்மந்தப்பட்ட ஒருவர் என்னை பாருக்கு அழைத்தார். நான் முடியாது என்று கூறவே அந்த சேனலில் எனக்கு வேறு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அந்த நேரங்களில் எனக்கு ஆறுதலாக பேச யாரும் இல்லை. இது ஒரு புறம் இருந்தாலும் நான் ஹீரோயினாக நடிக்க வந்த பட வாய்ப்புகளில் என்னை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொள்ளும்படி எனது அம்மாவிடமே கேட்டார்கள். ஆனால், அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அம்மாவிற்கு எதுவும் தெரியாது.

ஓ அது டேட் தானே சரிபார்த்துக் கொள்ளலாம் சார் என்றார். அது இல்லை மேடம் தயாரிப்பாளர், மேனேஜர் ஆகியோருடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டும் என்றார்கள். அப்போது தான் நான் ஒரு முடிவெடுத்தேன். இனிமேல் படங்களில் நடிக்க கூடாது. இதுவரையில் படங்களில் நடித்தது போதும் என்று முற்றிலுமாக அதிலிருந்து விலகிவிட்டேன். இதையடுத்து தான் எனக்கு விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வாய்ப்பு கிடைத்தது அடுத்தடுத்து சீரியல் வாய்ப்பும் கிடைத்தது என கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
தாய் நிலம் – திரைப்பட விமர்சனம்
தாய் நிலம் – திரைப்பட விமர்சனம்

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
Embed widget