China Unveils Nuclear Missile: அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
அமெரிக்காவும், சீனாவும் எதிரிகள் என்பது அனைவரும் அறிந்ததே. எதிரி என்றால் பயமுறுத்த வேண்டுமே.? அமெரிக்காவையே அச்சுறுத்தும் வகையிலான ஒரு அணு ஆயுத ஏவுகணையை சினா காட்சிப்படுத்தி, பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவையே அச்சுறுத்தும் விதமாக, ஒரு கொடிய அணு ஆயுத ஏவுகணையை வைத்துள்ளது சீனா. ஆம், அமெரிக்கா வரை சென்று தாக்கக் கூடிய அளவிற்கான ஒரு அணு ஆயுத ஏவுகணையை சீனா காட்சிப்படுத்தி, உலக நாடுகளை அலற வைத்துள்ளது.
12,000 கி.மீ தூரம் சென்று தாக்கும் அணு ஆயுத ஏவுகணை
உலக அளவில் பார்க்கும்போது, சீனாவிடம் ஆபத்தான, கொடிய ஆயுதங்கள் உள்ளன. அதை வைத்துக்கொண்டுதான், அமெரிக்கா போன்ற சக்திவாய்ந்த நாட்டையே மிரட்டுகிறது. இந்நிலையில், தற்போது அமெரிக்கா வரை சென்று தாக்கும் அளவிற்க, அதாவது அணு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு, 12,000 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று, இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஏவுகணையை முதன் முறையாக காட்சிப்படுத்தியுள்ளது சீனா.
கண்டம் விட்டு கண்டம் பாயும் DF-5B என்ற ஏவுகணையை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது சீனா. இந்த ஏவுகணையின் சோதனையை மிகவும் ரகசியமாக நடத்திய சீனா, தற்போது அந்த ஏவுகணையை அனைவருக்கும் காட்டியுள்ளது.
அமெரிக்காவுடன், ஐரோப்பிய நாடுகளில் உள்ள இலக்குகளையும் இந்த ஏவுகணையால் துல்லியமாக சென்று தாக்க முடியும்.
ஐப்பான் மீது வீசப்பட்ட ஏவுகணையைவிட சக்தி வாய்ந்தது
சீனாவின் இந்த DF-5B அணு ஆயுத ஏவுகணையின் எடை சுமார் 183 டன்கள். அதோடு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஐப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டை விட, சுமார் 200 மடங்கு சக்திவாய்ந்தது இந்த ஏவுகணை என கூறப்படுகிறது.
அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சீனா
சீனாவிடம் 600-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் உள்ளதாகவும், அவை செயல்பாட்டில் உள்ளதாகவும், கடந்த வருடம் பென்டகன் தெரிவித்தது.
இந்த ஆயுதங்களின் எண்ணிக்கையை வரும் 2030-ம் ஆண்டுக்குள் 1000-த்திற்கும் மேல் அதிகரிக்க சீனாவால் முடியும் என்று கருதப்படுகிறது.
DF-5B ஏவுகணையை சீனா காட்சிப்படுத்தியது ஏன்.?
சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், தைவானை ஆக்கிரமிக்க சீனா தயாராகி வருவதாகவும், அதற்காக, கைவானுக்கு அருகே உள்ள தீவுகளில் ராணுவ தளவாடங்களை குவித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், சீனாவிற்கு பதிலடி கொடுக்க, அமெரிக்கா உடன் நட்பாக இருக்கும் ஆசிய நாடுகள் தயாராக வேண்டும் எனவும் அவர் கூறினார்.
பகிரங்கமாக அவர் இவ்வாறு சீனாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியதால், அதற்கு பதிலளிக்கும் விதமாக, சீனா இந்த DF-5B அணு ஆயுத ஏவுகணையை வெளி உலகிற்கு காட்டியிருக்கலாம் என கருதப்படுகிறது.
தைவான் விஷயத்தில் அமெரிக்காவும், சீனாவும் நேரடி மோதலுக்கு தயாராகி வருவது இதன் மூலம் வெளிப்படுகிறது. அப்படி ஏதும் நடந்தால், அது மிகப் பெரிய போராக மாறும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் நடந்துவரும் நிலையில், நேரடிப் போரும் வந்தால், உலக நாடுகள் தாங்காது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.





















