Vijay TV Top 5 TRP Serial: TRP-க்காக விஜய் டிவி சீரியல்களுக்கு இடையே கடும் போட்டி ; முதலிடத்தை பிடித்த இரண்டு சீரியல்கள்! டாப் 5 பட்டியல் இதோ!
விஜய் டிவி தொலைக்காட்சியில், இந்த வாரம் டாப் 5 TRP-யை கைப்பற்றிய தொடர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

ஒவ்வொரு வாரமும் சீரியல்களுக்கு கிடைக்கும் வரவேற்பை TRP கொண்டே தொலைக்காட்சி நிறுவனங்கள் மதிப்பீடு செய்கிறது. அந்த வகையில் இந்த வருடத்தின் 22-ஆவது வாரத்தில், எந்த சீரியல் டாப் 5 இடத்தை கைப்பற்றி உள்ளது என்கிற தகவலை தெரிந்து கொள்வோம்.
இந்த வாரம் கடுமையான போட்டிகளுக்கு இடையே, இரண்டு சீரியல் TRP -யில் முதல் இடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் விஜய் டிவியில் துவங்கப்பட்ட 'அய்யனார் துணை' சீரியல் 8.4 டிஆர்பி புள்ளிகளை கைப்பற்றி உள்ளது. அதேபோல் சீதா கல்யாணத்திற்கு முத்து சம்மதிப்பாரா? சம்மதிக்க மாட்டாரா? பல சந்தேக கேள்விகளுக்கு இடையே ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலும் 8.4 TRP புள்ளிகளுடன் முதல் இடத்தை கைப்பற்றி உள்ளது. இந்த இரு சீரியல்களுக்கு இடையேயும் கடந்த சில வாரங்களாகவே கடுமையான போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வாரம் 2-ஆவது இடத்தில்... விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரான 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ' கைப்பற்றியுள்ளது. அரசின் திருமணம் சொதப்பிய நிலையில் அதன் பின் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் சீரியல் மீதான எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. இந்த சீரியல் 8.0 TRP புள்ளிகளை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, 'பாரதி கண்ணம்மா' சீரியல் பாணியில் தனக்கு அப்பாவும் தேவையில்லை - தன்னை அசிங்கமாக பேசிய கணவரும் தேவையில்லை என, தன்னுடைய டாக்டர் படிப்புக்காக போராடிவரும் தமிழ்ச்செல்வியின் தன்னம்பிக்கையை எடுத்துக்காட்டும் விதமாக ஒளிபரப்பாகி வரும் 'சின்ன மருமகள்' சீரியல் 6.3 TRP புள்ளிகளுடன் இந்த வாரம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
நான்காவது இடத்தில், விஜய் மீது விழுந்த பழியை எப்படி காவேரி நீக்க போகிறாள். வெண்ணிலா தற்கொலை செய்ய பசுபதி தான் காரணம் என தெரிந்தும் அதை எப்படி அவர்கள் நிரூபிப்பார்கள் என யூகிக்க முடியாத கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும், 'மகாநதி' சீரியல் பெற்றுள்ளது. இந்த வாரம், 'மகாநதி' சீரியல் 6.1 TRP புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பெற்றுள்ளது.
மேலும் இந்த வாரம் ஐந்தாவது இடத்தை 2 சீரியல்கள் கைப்பற்றி உள்ளன. சமீபத்தில் துவங்கப்பட்ட 'சிந்து பைரவி' மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் இரண்டுமே 4. 9 டிஆர்பி புள்ளிகளுடன், ஐந்தாவது இடத்தை கைப்பற்றி உள்ளது.





















