Pandian Stores 2: செந்தில் செய்த தில்லுமுல்லு! சிக்கிய மீனா... மயிலை வெளியே துரத்தும் அம்மா! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில், செந்தில் தனக்கு அரசு வேலைக்காக ரூ.10 லட்சம் பணத்தை மாமனாரிடம் கொடுத்த நிலையில்... என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 504 ஆவது எபிசோடில் எதிர் வீட்டில் நடக்கும் சம்பவத்தை வேடிக்கை பார்த்து கோமதி மற்றும் ராஜீயிடம் மீனா சிக்கிக் கொள்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை மொத்தமாக சொல்லாமல் முழுங்கி முழுங்கி வெளிப்படுத்தினார். எதிர்வீட்டில் சண்டை, பாக்ஸ் பாக்ஸா பணம் எடுத்துட்டு போனாங்க. குமாரவேலுவும், அவரது அப்பாவும் அவசர அவசரமாக புறப்பட்டு சென்றார்கள் என்றார் மீனா.
அப்போது சுகன்யா எதிர் வீட்டிலிருந்து வருவதை பார்த்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், சுகன்யா எல்லா உண்மையையும் உளறி கொட்டுகிறார். அதாவது, வருமானத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். கத்தை கத்தையாக பணத்தை எடுத்துட்டு போயிட்டாங்க. வீட்டில் மட்டுமில்லை, மில் மற்றும் கடை என்று எல்லா இடத்திலேயும் சோதனை நடத்துறாங்க. வரி கட்டாததால் கணக்கில் வராத பணத்தை எடுத்துக் கொண்டுசென்றுவிட்டார்கள் என கூறுகிறார்.

இதில், கோமதி என்னுடைய கணவர் சின்னதா ஒரு கடை வைத்திருக்கிறார். முறையாக வரியும் கட்டுகிறார் என்றார். இதற்கிடையில் அரசியின் கல்யாணத்துக்காக எடுக்கப்பட்ட ரூ.10 லட்சம் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய பாண்டியன் கூற, அதனை செந்தில் அப்படியே எடுத்துக் கொண்டு போய் தனது மாமனாரிடம் அரசு வேலைக்காக கொடுக்கிறார்.
எப்படியும் அரசு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் மொத்த பணத்தையும் அவரிடம் கொடுத்துவிட்டார். ஆனால், அவருக்கு அரசு வேலை கிடைக்குமா? என்பது தான் இப்போது கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. அப்படியே அரசு வேலை கிடைத்தாலும் அதன் பிறகு எந்த மாதிரியான பிரச்சனைகள் வரும் என்ற கேள்வியும் இப்போது தோன்றுகிறது. ஒரு மாசத்திற்குள்ளாக உங்களுக்கு அரசு வேலை வாங்கி தந்துவிடுவேன் என்று செந்திலின் மாமானார் வாக்குறுதி அளித்துள்ளார். எப்படியும் இந்த விஷயம் முத்துவேல் மற்றும் சக்திவேல் குடும்பத்திற்கு தெரியவர அதன் பிறகு இதை வைத்து முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் கேம் விளையாடினாலும்.. ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இறுதியாக தங்கமயில் வீட்டிற்கு சென்ற அக்கம் பக்கத்தினர் ஆன்மீக சுற்றுலா செல்வதாக கூறி... அவர்களை அழைக்க பின்னர் சரவணன் மற்றும் தங்கமயில் இடையே உள்ள சண்டை குறித்துபேச ஆரம்பித்துவிட்டனர். இது தங்கமயிலின் அம்மாவிற்கு கஷ்டத்தையும் மன வருத்தையும் கொடுக்கிறது. இதனால், ஆத்திரமடைந்த தங்கமயிலின் அம்மா வீட்டிற்கு வந்தவர்களை வெளியில் அனுப்பிவிட்டு முதலில் தங்கமயிலை வீட்டை விட்டு வெளியில் துறத்த திட்டமிடுகிறார். முதலில் நீ இங்கிருந்து கிளம்பு உனக்கு சாப்பாடு எல்லாம் எங்களால் போட முடியாது என்று கூறி முதலில் வீட்டை விட்டு வெளியேறு என்று கூறியுள்ளார். இதனால், தங்கமயில் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதை தொடர்ந்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.





















