புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 100 பேராசிரியர்கள் நியமனம்! புதிய பாடத்திட்டங்கள்: முக்கிய அறிவிப்பு!
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதிய பாடத்திட்டங்கள் துவக்கப்பட உள்ளதாகவும், 100 பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக துணை வேந்தர் பிரகாஷ் பாபு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 100 பேராசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளதாக புதுவை பல்கலைக்கழக துணை வேந்தர் பிரகாஷ் பாபு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுகலை காட்சிக் கலை, முதுகலை அறிவியல் (அளவுசார் நிதி), இளங்கலை பொறியியல் (சுற்றுச்சூழல் பொறியியல்), இளங்கலை அறிவியல் (உளவியல்), இளங்கலை அறிவியல் (உயிர் தகவலியல்) உள்ளிட்டா ஆறு புதிய பாடத்திட்டங்கள் துவக்கப்பட உள்ளதாகவும், 100 பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும், தற்போது ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள பேராசிரியர்கள் நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புதுவை பல்கலைக்கழக துணை வேந்தர் பிரகாஷ் பாபு தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த புதிய பாடத்திட்டங்கள் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் அறிவை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மேலும் திறன் மற்றும் ஆற்றல்களை பெற இந்த பாடத்திட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை, புதுச்சேரியில் உள்ள பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் உளவியல் போன்ற துறைகளின் மீது உள்ள மக்களின் ஆர்வம் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த புதிய பாடத்திட்டங்கள், மாணவர்களுக்கு தொழில்முறை வாய்ப்புகளை அதிகரிக்கவும், ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கவும் உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.





















