Musk Spoke to Trump: பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
உலக பணக்காரர் எலான் மஸ்க், ட்ரம்ப் குறித்த பதிவுகளுக்கு வருத்தம் தெரிவித்து வெளியிட்ட பதிவிற்கு முன்னர், அவர் ட்ரம்ப்புடன் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் என்ன பேசினார் தெரியுமா.?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உலக பணக்காரர் எலான் மஸ்க் இடையே மோதல் இருந்துவந்த நிலையில், சமீபத்தில் ட்ரம்ப் தொடர்பான சர்ச்சைப் பதிவுகளை நீக்கியதுடன், அதற்கு வருத்தமும் தெரிவித்து மஸ்க் பதிவிட்டார். இதனால், இருவருக்குமிடையேயான மோதல் முடிவுக்கு வந்த நிலையில், அந்த பதிவை போடுவதற்கு முன்னதாக, ட்ரம்பிடம் எலான் மஸ்க் தொலைபேசி வாயிலாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்ப்பிடம் என்ன பேசினார் மஸ்க்.?
ட்ரம்ப் குறித்து சர்ச்சைப் பதிவுகளை போட்டு உலக அளவில் பேசுபொருளாக்கிய எலான் மஸ்க், சில நாட்களுக்கு முன்னர் தனது பதிவை நீக்கியதுடன், ட்ரம்ப் குறித்த பதிவுகளுக்கு வருத்தமும் தெரிவிட்டு நேற்று பதிவு ஒன்றை பேட்டார். அதில், கடந்த வாரம் ட்ரம்ப் குறித்த சில பதிவுகளை போட்டதற்காக வருந்துகிறேன், அவை மிகையாகிவிட்டன என தெரிவித்திருந்தார்.
I regret some of my posts about President @realDonaldTrump last week. They went too far.
— Elon Musk (@elonmusk) June 11, 2025
இந்நிலையில், அந்த பதிவை போடுவதற்கு முன்னதாக, ட்ரம்ப்பிடம் அவர் தொலைபேசி வாயிலாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, திங்கட்கிழமை இரவு, மஸ்க் ட்ரம்ப்பிடம் பேசிய. தனது வருத்தத்தை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, எலான் மஸ்க் ட்ரம்ப்புடன் பேசுவதற்கு முன்னதாக, பிரச்னையை எப்படி தீர்ப்பது என்பது குறித்த ஆலோசிக்க, அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் மற்றும் வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி சுசி வைல்ஸ்ஸிடம் பேசிதாகவும் கூறப்படுகிறது.
மஸ்க்குடன் பேசியதைத் தொடர்ந்து, துணை அதிபர் வான்ஸ் அதிபர் ட்ரம்ப்பிடமும் பேசி, மஸ்க் வெளிப்படையாகவும், தனிப்பட்ட முறையிலும் ட்ரம்ப்பின் செயல்திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதை உறுதி செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளை மாளிகை கூறியது என்ன.?
எலான் மஸ்க்கின் இந்த பதிவு குறித்து கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரேலின் லீவிட், மஸ்க்கின் தனது எக்ஸ் தளத்தி பேட்ட பதிவை ட்ரம்ப் ஏற்பதாகவும், அதை அவர் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
ட்ரம்ப் - மஸ்க் இடையே இருந்த மோதல் என்ன.?
அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பை வெற்றிபெறச் செய்ய முக்கிய பங்காற்றினார் எலான் மஸ்க். அதைத் தொடர்ந்து அதிபரான ட்ரம்ப், அரசு செயல்திறன் துறை(DOGE) என்ற ஒன்றை உருவாக்கி, அதற்கு தலைவராக எலான் மஸ்க்கை நியமித்தார்.
அதன் பின் அதிரடியாக செயல்பட்ட மஸ்க், பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அதற்கு ஒருபுறம் பலத்த எதிர்ப்புகள் எழுந்தது ஒருபுறமிருக்க, அரசின் மீதே அதிக கவனம் செலுத்தியதால், மஸ்க்கின் நிறுவனங்கள் சிக்கலை சந்தித்தன. அவரது டெஸ்லா நிறுவனம் சரிவை நோக்கி சென்றுகொண்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, தனது கவனத்தை தனது நிறுவனங்கள் மீது திருப்பப் போவதாக மஸ்க் அறிவித்ததையடுத்து, இருவருக்கும் இடையே சிறிய மனவருத்தம் ஏற்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் அரசு செயல்திறன் துறையிலிருந்து விலகினார் எலான் மஸ்க்.
அதைத் தொடர்ந்து, மஸ்க் - ட்ரம்ப் இடையேயான மோதல் அதிகரித்து, சமூக வலைதளத்தில் மாறி மாறி பதிவுகளை போட்டு வந்தனர். இந்த சூழலில், உண்மையிலேயே பெரிய குண்டு ஒன்றை போட வேண்டிய நேரமிது என்று குறிப்பிட்டு, எப்ஸ்டீன் கோப்புகளில் ட்ரம்ப்பின் பெயர் உள்ளது என மஸ்க் ஒரு பதிவை போட்டார். அந்த கோப்புகள் பொதுவெளியில் வராததற்கு அது தான் உண்மையான காரணம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து மோதல் பெரிதாகி, கோபமடைந்த ட்ரம்ப், மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கான அரசு ஒப்பந்தங்களை ரத்து செய்துவிடுவேன் என மிரட்டினார். இப்படிப்பட்ட சூழலில், திடீரென ட்ரம்ப் எப்ஸ்டீன் ஆவணங்களில் உள்ளதாக தான் போட்ட பதிவை சமீபத்தில் நீக்கினார் எலான் மஸ்க்.
அதைத் தொடர்ந்து, ட்ரம்ப் குறித்த மொத்த பதிவுகளையும் நீக்கிய மஸ்க், அது போன்று பதிவிட்டதற்கு ட்ரம்பிடம் வருத்தமும் தெரிவித்து நேற்று பதிவிட்டார்.
இந்நிலையில் தான், இந்த பதிவை போடுவதற்கு முன் அவர் ட்ரம்ப்பிடம் தெலைபேசி வாயிலாக பேசிய விவரம் வெளியாகியுள்ளது.





















